மாஸ் காட்ட நனைச்சு மண்ணை கவ்விய நயன்… காப்பி ரைட் கேஸில் அடுத்து என்ன நடக்கும்?

Nayanthara: நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கில் திடீர் ட்விஸ்ட்டாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடித்தான் படத்தில் இருந்து காதலித்து பின்னர் நெருங்கிய வட்டாரத்துக்கு இடையே பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தை நெட்பிளிக்ஸில் விற்பனை செய்தனர்.
இருந்தும் 2 வருடங்கள் கடந்தும் அதுகுறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவே இல்லை. தொடர்ந்து கடந்தாண்டு நயன் பிறந்தநாளில் நெட்ஃபிளிக்ஸில் நயன்தாராவின் திருமண டாக்குமெண்ட்ரி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு இரண்டு நாட்கள் முன்பு நயன் ஒரு கடிதத்தை வெளியிட்டார். ஆனால் அதில் மிகப்பெரிய வன்மத்தை கொட்டி தனுஷை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடயே எழுதப்பட்டு இருந்தது. பட காட்சி இல்லாமல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவிற்கு 10 லட்சம் கேட்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அவர் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் நயனுக்கு எதிராகவே கருத்து பதிவிட்டனர். நீங்களும் சம்பாரிக்க தானே போகிறீர்கள் எனவும் கமெண்ட்களை கொட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் அந்த காட்சியை நீக்க வேண்டும் இல்லை நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் தனுஷ் தரப்பு வாதத்தை நயன் மதிக்காமல் போனார்.
திருமண டாக்குமெண்ட்ரியில் தனுஷின் நானும் ரவுடித்தான் படத்தின் ஷூட்டிங் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதை தொடர்ந்து தனுஷ் தரப்பு காப்பிரைட் கேட்டு வழக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது நீதிமன்றம்.
இதுகுறித்தான விசாரணை நேற்று நடந்தது. வுண்டர்பார் தரப்பு நானும் ரவுடித்தான் படத்துக்கு நயன் கையெழுத்து போடும் போதே அவரின் உடை முதற்கொண்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தம். அதனால் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவும் வுண்டர்பாருக்கே சொந்தம் எனக் கூறப்பட்டது.
மேலும் சென்னையில் வுண்டர்பார் நிறுவனம் இருந்ததாகவும், ஷூட்டிங்கும் சென்னையில் நடந்ததால் வழக்கை இங்கு தொடர்ந்ததில் எந்த பிரச்னையும் இல்லை. இதனால் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற நயனுக்கு ஆதரவாக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது.
தற்போது தனுஷின் வழக்கை விசாரிக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இதில், தனுஷ் தரப்பு வெல்லும் பட்சத்தில் 10 கோடியை நயன் கொடுக்க அதிக வாய்ப்பும் வரலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விசாரணை விரைவில் தொடங்க இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.