அப்பா 8 அடினா? பிள்ளை 16 அடி.. கெத்து காட்டிய துருவ் விக்ரம்.. நின்னு ஆடும் பைசன்

தீபாவளி ரிலீஸாக நேற்று மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. டியூட், பைசன், டீசல் என முற்றிலும் இளம் தலைமுறை நடிகர்களின் படங்களே இந்த வருட தீபாவளி ரிலீஸாக வெளியாகி இருக்கின்றன. வழக்கமாக பெரிய பெரிய நடிகர்கள் படங்கள் தான் தீபாவளி, பொங்கல் ரேஸில் களமிறங்கும். ஆனால் இந்த முறை இளம் தலைமுறை நடிகர்களின் படங்கள் வரிசை கட்டிக்கொண்டு ரிலீஸாகி இருக்கின்றன. இந்த ரேஸில் பைசன் திரைப்படம் முந்தி போய்க் கொண்டிருப்பதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மாரி செல்வராஜை பொறுத்த வரைக்கும் மூன்று படங்களுமே வெற்றியடைய வேண்டும் என்பது போல அவருடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுதான் ஒரு நல்ல இயக்குனருக்கு அழகு. அதே மாதிரி எல்லாருமே போட்டு இருந்தார்கள். ஆனால் இந்த தீபாவளி ரேஸில் முன்னணியில் இருப்பது பைசன் திரைப்படம் தான் என அந்தணன் கூறி இருக்கிறார். தீபாவளி ரேசில் மட்டுமல்ல இதுவரை வெளியான தமிழ் படங்களில் மிக முக்கியமான படமாக மாறி, என்றைக்கோ வந்த படங்களில் கூட இன்று ரேஸில் முந்தி இருப்பது பைசன் திரைப்படம். அதுஒரு பெரிய மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து மாரிசெல்வராஜ் அவருடைய வலியை சொல்கிறார் என வெவ்வேறு பாசைகளில் அவரை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் எதையுமே மாரிசெல்வராஜ் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய படைப்புண்டு தன்னுடைய அழகியல் உண்டு என்பது மட்டும் இருந்திருக்கிறார். இவ்வளவு அழகியலோடு இப்படி ஒரு படைப்பை கொடுக்க முடியுமா என்ற அளவுக்கு வியக்க வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். அந்தக் களமே ஒரு வன்மமான களம். வன்முறை தாண்டவம் ஆடுகிற ஒரு களத்தை கையில் எடுத்துக் கொண்டு மிகவும் பொயட்டிக்காக கொடுப்பது என்பது மாரி செல்வராஜ் மாதிரி ஒரு சில பேருக்கு மட்டும் தான் அமையும்.
இதற்கிடையில் பைசன் திரைப்படத்தில் வசனங்களை எல்லாம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வசனங்களை நீக்குவதற்குள் படத்தை பார்த்து விடுங்கள் என்பது போல வெளியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பல கருத்துக்கள் இந்த படத்திற்குள் இருக்கிறது. என் அப்பன் தாத்தன் அவனுக்கு தாத்தன் இவர்களுக்கு முன்னாடி உருவான கதை இது. அது இன்னமும் ஏன் தொடர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக என்கிட்ட அந்தப் பகை ஏன் வருகிறது. அது ஏன் யாரோ ஒருத்தரை பாதித்துக்கொண்டு வருகிறது. இதைப்பற்றி தான் அந்த படத்தில் வசனங்கள் வருகின்றன.
அவ்வளவு பெரிய நெருப்பில் ஒரு ஐஸ் வாட்டரை இந்த முறை எரிந்து இருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் எடிட் பண்ணுவதற்கும் கட் செய்வதற்கும் ஒன்றுமே இல்லை. அப்படியே படத்தை பார்க்கலாம். ஆரம்பத்தில் இருந்தே மாரி செல்வராஜ் படங்களை நாங்கள் பார்க்கவே மாட்டோம் என்று சொல்லுகிற ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு சேர்த்தே இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்றும் ஒரு கருத்து இருந்து வருகிறது. அவருடைய வலியை ஒரு பக்கம் கடத்திக் கொண்டே வருகிறார். இன்னொரு பக்கம் அதைக் கேட்கிற சமூகம் இந்த நியாயத்தை புரிந்து கொள்ள மாட்டீர்களா என்ற என்ற வகையில் இந்த படத்தில் சில செய்திகளை எழுப்பி இருப்பதாகவும் அந்தணன் கூறுகிறார்.
பைசன் திரைப்படத்திற்கு பிறகு துருவ் விக்ரமின் வாழ்க்கையிலும் வெளிச்சம் வருமா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. இதைப் பற்றியும் அந்தணன் கூறும் பொழுது இந்த படத்திற்காக துருவ் விக்ரம் தன்னை அப்படியே அர்ப்பணித்திருக்கிறார். ஒரு பெரிய நடிகரின் மகன் என்ற அந்தஸ்தையும் தாண்டி துருவ் விக்ரம் வந்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள். இது நூறு சதவீதம் உண்மை. உள்ளபடியே இந்த கேரக்டரை வேறு யாரும் எடுத்து சுமக்கவே முடியாது .பொய்யை தான் உண்மை போல் காண்பிக்கிறார்கள். அதுதான் சினிமா.
ஆனால் சினிமாவுக்காக ஒரு காட்சியில் மாடு ஏர் உழுதல் பற்றி காண்பித்திருப்பார்கள். அந்த கம்பை பிடித்து இழுத்து வருவார் பாருங்க துருவ் விக்ரம். அதன் பின்னாடி ஒரு கேரக்டர் உட்காருந்திருக்கும். அதையும் சேர்த்து துருவ் விக்ரம் இழுத்துக் கொண்டு வருவதை பார்க்கும் பொழுது அற்புதமாகவே பண்ணியிருக்கிறார். படத்தை போய் பாருங்கள். துருவ் விக்ரம் எந்த அளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது கண்கூடாகவே தெரியும். விக்ரம் டெடிகேஷன் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரை விட ஜாஸ்தியா இவர் பண்ணுவாரோ என்பது போலத்தான் இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார் என அந்தணன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.