வாழ்க்கையில உன்ன பார்த்து மட்டும் தான் பொறாமைப்படுறேன்.. தனுஷ் சொன்ன அந்த நடிகை
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். நடிப்பு அசுரன் என பெயர் எடுத்தவர். இத்தனை ஆண்டு கால சினிமாவில் இவருடைய சாதனையும் புகழும் இன்று அனைவராலும் பிரமிக்க வைத்திருக்கிறது.
விஜய் அஜித் சூர்யா இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தில் தனுஷ் இப்போது இருந்து வருகிறார். சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற வருகின்றன.
ஆரம்பத்தில் ஒரு லவ்வர் பாயாக கிடைக்கிற கதைகளில் நடித்து கலவையான விமர்சனத்தை பெற்று வந்த தனுஷ் சமீப காலமாக அனைவரையும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். தற்போது குபேரன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த நிலையில் தனுஷை பற்றி பிரபல நடிகை துஷாரா விஜயன் ஒரு சுவாரசிய தகவலை கூறுகிறார். துஷாரா விஜயன் தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தந்கையாகவும் நடித்து இருப்பார் .
அதே வேளையில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகின்றது. ராயன் படத்தில் நடிக்கும் போது தான் வேட்டையன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு துஷாரா விஜயனுக்கு வந்திருக்கிறது.
வேட்டையன் படம் ஆரம்பித்ததும் முதல் காட்சியில் நடித்துவிட்டு ராயன் படத்தின் செட்டிற்கு வந்தாராம் தஷாரா விஜயன். அப்போது தனுஷ் துஷாரா விஜயனிடம் வேட்டையன் படத்தில் நடிக்கிறாயாமே? தலைவர பாத்தியா? பக்கத்துல இருந்து பாத்தியா ?
அவருடன் நடிச்சிருக்கியாமே ?என்றெல்லாம் கேட்டுவிட்டு என் வாழ்க்கையில் என்னை அதிகமா பொறாமைப்பட வைத்த ஒரே நபர் நீதான் என்ன சொன்னாராம். ஏனெனில் ரஜினியின் தீவிர ரசிகன் தான் தனுஷ் .அவருடன் சேர்ந்து துஷாரா விஜயன் நடித்தது தனுஷை மிகவும் பொறாமைப்பட வைத்திருக்கிறது என துஷாரா விஜயன் கூறினார்.