டைரக்டர் ஷங்கருக்கு ரஜினி சாபம் விட்டாரா? பகீர் கிளப்பும் பிரபலம்

by Sankaran |   ( Updated:2025-01-11 07:05:50  )
rajni, director shankar
X

கேம் சேஞ்சர் வெளியாவதற்கு முன் இயக்குனர் ஷங்கர் நிறைய சேனல்களுக்குப் பேட்டி கொடுத்தார். அதுல ஷங்கர் சொன்ன விஷயம் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க. ரஜினியிடம் ஒரு சேனலில் ஆங்கர் கேள்;வி கேட்கும்போது பயோபிக்கா எடுத்தா யாருடைய லைஃப் பற்றி எடுப்பீங்கன்னு கேட்கிறார். அப்போ ஷங்கர் சொன்ன பதில் இதுதான். எனக்கு ரஜினி சாரைப் பற்றி எடுத்தா நல்லாருக்கும்னு சொன்னார்.

ரஜினியைப் பற்றி ஷங்கர் எடுத்தாருன்னா அதுக்கான சாத்தியக்கூறுகளை ரஜினி அமைத்துத் தருவாராங்கறதுதான் முக்கியம். ஷங்கருடைய படத்தில் இனி வாழ்நாளில் ரஜினி நடிக்கவே மாட்டார் என்பதுதான் உண்மை.

கடைசிநாளில் ரஜினி சொன்னது: இதை நான் சொல்லல. ரஜினியே சொன்னது. 2.O வின் படப்பிடிப்பின் கடைசிநாளில் ஷங்கரிடம் சொல்லுங்க. இனி அவருடன் சேர்ந்து படம் பண்ணவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அதுக்கு என்ன காரணம்னா ரஜினி தமிழ்சினிமாவின் அடையாளம். அவர் மிகப்பெரிய சகாப்தம்.

அவரை அந்தப் படப்பிடிப்பில் எவ்வாறு எல்லாம் நடத்தினார்கள் என்பதுதான் வருத்தத்திற்கு உரியது. ரஜினி காலை 6 மணிக்கு சூட்டிங்னா 5.30மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். இதை ஒருநாளும் தவறியது கிடையாது.


அப்படிப்பட்டவர் ஒருநாள் 2.O படப்பிடிப்புக்கு லேட்டாக வந்துட்டாரு. அந்தப் படத்துக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் ஷங்கரின் அக்கா மகன் பப்லு. அவருக்கு என்ன காரணத்தாலோ ரஜினியைப் பிடிக்காமலேயே இருந்துருக்கு.

லேட்டா வந்த ரஜினி: தொடர்ந்து அவர் மீது கடுப்பாகவே இருந்தாராம். காலை 7 மணிக்கு சூட்டிங். அரைமணி நேரம் லேட்டா வந்தாராம் ரஜினி. அந்த நேரத்தில் பதறியபடி வந்து மேக்கப் போட்டார். லேட்டா வந்துட்டேனோ சாரின்னு சொல்றார்.

அப்போ பப்லு 'என்ன சார் சூட்டிங்குக்கு எப்போ பார்த்தாலும் லேட்டாவே வர்றீங்க? சரியான நேரத்துக்கு வரணும்னு தெரியாதா?'ன்னு சொன்னாராம். அப்போது ரஜினியின் முகத்தைப் பார்க்கும்போது பக்கத்தில் இருந்தவருக்கு அழுகையே வந்துவிட்டதாம்.

மேக்கப் போட்டதும் ஸ்பாட்டுக்கு ஓடும்போது கால் தடுக்கி விழுந்துவிட்டாராம். சரியான அடியாக இருந்தபோதும் காலைத் துடைச்சிட்டுப் போய்விட்டாராம். அதே நேரம் ஷங்கர் ரஜினி வரலன்னதும் வேறொரு காட்சியை எடுக்க ஆரம்பித்தாராம். ரஜினி வந்ததும் அவரது காலில் ரத்தம் வருவதைப் பார்த்துள்ளார் ஷங்கர்.

ரஜினிக்கு ரெஸ்ட்: உடனே பேக்கப் பண்ணி சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாம். 10 நாள் சூட்டிங் நடக்கல. ரஜினிக்கு ஷங்கர் ரெஸ்ட் கொடுத்துவிட்டார். இது போல பல அவமானங்களை ரஜினி சந்தித்தார். ஆனாலும் ஷங்கர் இதைக் கண்டும் காணாமலும் இருந்துவிட்டாராம். அவருடைய அனுமதி இல்லாமல் அவருக்குக் கீழ் பணியாற்றும் யாரும் உள்ளே வரமுடியாதாம்.

அதனால் ஏதோ ஒண்ணு நடக்குதுன்னு ரஜினிக்கு முடிவுக்கு வந்துருக்காரு. ரஜினியின் டிரஸ் வெயிட் 15 கிலோவாம். லைட் அடிக்கும்போது உள்ளே அப்படி ஒரு ஹீட்டாகும். 15கிலோ மெட்டீரியல் உள்ள இந்த சட்டையை காஸ்டியூமரும் இன்னொருவரும் சேர்ந்து டைரக்டருக்கும், கேமராமேனுக்கும் தெரியாமல் அரைகிலோ அளவுக்கு மாற்றிக் கொடுத்தாராம்.

வறுத்து எடுத்த ஷங்கர்: ரஜினியே ஆச்சரியப்பட்டு 3 நாள் வரை அந்த டிரஸ்சைப் போட்டு நடித்துள்ளார். அப்போது கேமராமேனுக்குத் தெரிந்துவிடுகிறது. அவர் ஷங்கரிடம் சொல்ல அவர் அத்தனை பேரையும் வறுத்து எடுத்துவிட்டாராம். அதேபோல பப்லு ரஜினியின் கேரவனை மட்டும் 150 அடி தூரத்தில் நிறுத்தி அங்கிருந்து நடக்க விட்டாராம்.

அதே போல அந்தப் படப்பிடிப்பில் வில்லன் அக்ஷய்குமாருக்குப் பல மடங்கு கவனிப்பு இருந்ததாம். அவை எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொண்ட ரஜினி கடைசி நாளில் இனி இந்தக் காம்போ நடக்காது என்று அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் சொன்னாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story