அல்லு அர்ஜூன் கைதா? அப்போ கேஸே வேணாம்… உயிரிழந்த பெண்ணின் கணவர் ஷாக்…

by Akhilan |
அல்லு அர்ஜுன்
X

அல்லு அர்ஜுன் 

Allu Arjun: புஷ்பா இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வெளியீட்டில் நடந்த தள்ளுமுள்ளில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தற்போது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பலமொழிகளில் வெளியான திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் சிறப்பு காட்சியை காலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த காட்சியை பார்க்க சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த ரேவதி என்ற 39 வயதாகும் பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு அல்லு அர்ஜுன் சார்பில் 25 லட்ச ரூபாய் இழப்பீடாக கொடுக்கப்பட்டது.

இருந்தும், அந்த நேரத்தில் அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு போடப்பட்டு இருக்கிறது. இருந்தும் என்ற விசாரணைக்காக அல்லு அர்ஜூன் அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு நீதிபதி முன்னர் அல்லு அர்ஜுனை போலீசார் ஆஜர் படுத்தினர். இதைத்தொடர்ந்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் வைரலான நிலையில் பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியான பதில் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

அல்லு அர்ஜூனை கைது செய்யும் பட்சத்தில் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் கூறுகையில், நான் இந்த வழக்கை உடனே வாபஸ் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

கூட்ட நெரிசலில் சிக்கி என்னுடைய மனைவி இறந்ததற்கு அல்லு அர்ஜுனால் எதுவும் செய்ய இயலாது. எனக்கு அவரின் கைது குறித்து எதுவும் தெரியாது. ரேவதியின் குடும்பத்தார் கொடுக்கப்பட்ட வழக்கில் தான் அல்லு அர்ஜூனுக்கு தற்போது நீதிமன்ற காவல் வழங்கப்பட்டிருக்கிறது.

இவர்களின் இந்த திடீர் வாக்குமூலத்தால் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் கைது தற்போது தெலுங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதும் திரை வட்டாரத்தில் பேச்சுகளாக அடிபட்டு வருகிறது.

Next Story