1. Home
  2. Cinema News

டீசல் தீபாவளி ரிலீஸ்!. மனசு உடைஞ்சி போயிட்டேன்!.. ஹரிஸ் கல்யாணை அழ வச்சிட்டாங்களே!...

diesel

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஹரிஷ் கல்யாண். அதன்பின் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பேசப்படவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த போது அதையும் பயன்படுத்திக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரிஸ் நடித்த பியார் பிரேமா காதல் படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்கிற படத்தில் நடித்தார். அதன் பின் சில படங்களில் நடித்தும் அவை ஹிட் ப்படங்களாக அமையவில்லை .அதேநேரம் தாராள பிரபு படம் இவருக்கு நல்ல வசூலை கொடுத்தது.

2023ம் வருடம் வெளியான பார்க்கிங் திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தின் திரைக்கதைக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 2024ம் வருடம் ஹரிஸ் நடித்திருந்த லப்பர் பந்து படமும் இவருக்கு சிறந்த படமாக அமைந்தது. தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார்.

கடல் மார்க்கமாக டீசலை எப்படி கடத்துகிறார்கள்? அதன் பின்னணியில் இருக்கும் கும்பல் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். பைசன், Dude ஆகிய படங்களோடு டீசல் படமும் போட்டி போடவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய ஹரிஷ் ‘10 நாளைக்கு முன்பு ஒருத்தர் டீசல் படத்தின் தயாரிப்பாளரிடம் ‘இந்த படத்தில் பெரிய ஹீரோ இல்லை. ஹீரோயின் இல்லை. இசையமைப்பாளர் இல்லை. தீபாவளிக்கு வருவதற்கு இந்த படத்திற்கு என்ன தகுதி இருக்கு?’ என கேட்டிருக்கிறார்.

இதை தயாரிப்பாளர் என்னிடம் சொன்ன போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. தீபாவளி ரிலீசுக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கணும்னு எனக்கு தெரியல. நல்ல கதை இருந்தா அந்த படம் வரலாம். அவ்வளவுதான்’ என கண்கலங்கி பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.