உலக அளவில் கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?!.. சும்மா அடிச்சி தூக்கு!..
Game Changer: தில் ராஜு தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று வெளியான திரைப்படம்தான் கேம் சேஞ்சர். இந்தியன் 2 படம் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ஷங்கருக்கு இந்த படத்தின் வெற்றி முக்கியமாக கருதப்பட்டது.
அதோடு, ஷங்கர் இயக்கியுள்ள முதல் நேரிடையான தெலுங்கு படம் இது. அதோடு, தமிழ், ஹிந்தி மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஷங்கரின் ஸ்டைலில் படம் இல்லை, பக்கா தெலுங்கு படம் போலவே இருக்கிறது.
வழக்கமாக தெலுங்கு படங்களில் வரும் மசாலா காட்சிகள் எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. படத்தில் வரும் 20 நிமிட பிளாஷ்பேக் காட்சி, ராம் சரணின் நடிப்பு மற்றும் தமனின் பின்னணி இசை ஆகியவை மட்டுமே படத்தில் நன்றாக இருக்கிறது, இந்தியன் 2-வை ஒப்பிட்டால் இந்த படம் ஓகே என சிலரும், படம் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக இது ஹிட் அடிக்கும் என்றும் சிலர் சொன்னார்கள்.
இந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, எல்லா மொழிகளிலும் இப்படம் ஹிட் அடித்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், இப்படத்தின் முதல் நாள் வசூல் 100 கோடியை தொடவில்லை என இன்று காலை செய்திகள் வெளியானது.
இந்தியாவில் 60 கோடியும், வெளிநாடுகளில் 17 கோடியும் என மொத்தம் 77 கோடியை இப்படம் வசூல் செய்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் கேம் சேஞ்சர் படம் உலகம் முழுவதும் 186 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
தற்போதெல்லாம் படம் ஓட வேண்டும் என்பதற்காக முதல் நாளில் இவ்வளவு வசூல் என தயாரிப்பு நிறுவனமே பொய்யான செய்தியை வெளியிடுவது அதிகரித்துவிட்டது. அதைத்தான் கேம் சேஞ்சர் தயாரிப்பாளரும் செய்திருக்கிறாரா இல்லை இது உண்மையான வசூல்தானா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.