போதுண்டா சாமினு கையெடுத்து கும்பிட்ட தில் ராஜு... நம்ம பிரம்மாண்டம் வச்ச ஆப்பு அப்படி!..

Director Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். தோல்வியே கண்டிராத இயக்குனராக இருந்து வந்த ஷங்கர் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் இந்த திரைப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வந்தார்கள்.
கேம் சேஞ்சர்: இந்தியன் 2 திரைப்படத்தில் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தெலுங்கில் நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோரை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார் ஷங்கர்.
மேலும் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று பெரியளவு நம்பப்பட்ட நிலையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு பேன் இந்தியா திரைப்படமாக வெளியானது. ஆனால் படம் முழுசாக 200 கோடியை கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கின்றது.
சோகத்தில் தில்ராஜு: இந்த திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த தில் ராஜுவுக்கு அடுத்தடுத்து பல பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் தான் வருமான வரித்துறையினர் ராஜுவின் வீடு, அலுவலகம் மற்றும் மனைவியின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தோல்வி மற்றும் ரெய்டு உள்ளிட்ட சம்பவத்தால் ஒரு பக்கம் தில் ராஜு சோகமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆறுதல் கொடுத்தது தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான சங்கராந்தி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தையும் தயாரிப்பாளர் தில் ராஜுதான் தயாரித்திருந்தார்.
இப்படத்தில் நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படம் வெறும் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான நிலையில் கிட்டத்தட்ட 170 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதன் மூலம் மிகப் பெரிய லாபத்தை பார்த்திருக்கின்றார் தில் ராஜு.
இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கின்றாராம். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் ஷங்கர் படம் தோல்வி அடைந்ததற்கு பிறகு ஒரு ஆறுதலுக்கு கூட தனக்கு போன் செய்து பேசவில்லை என்று அவர் வருத்தப்பட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறி வருவதாக சினிமா விமர்சனங்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.