தில் ராஜூவை கூல் செய்து கேம் சேஞ்சரை காப்பாற்றிய ஷங்கர்!.. லைக்காவுக்கு விபூதி அடிச்சிட்டாரே!...

by Murugan |
shankar
X

Game Changer: ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடித்து நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் கேம் சேஞ்சர். இந்த படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. பொங்கலை முன்னிட்டு வருகிற 10ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் பெரிய நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட்டுகளில் படங்களை உருவாக்கி வரும் தயாரிப்பாளரான தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்தவர்.

கேம் சேஞ்சர்: கேம் சேஞ்சர் கதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கியது. ஆனால், ‘என்னால் இதை சரியாக இயக்க முடியாது. உங்களுக்குதான் இது சரியாக இருக்கும்’ என சொல்லி அவர் ஷங்கரிடம் இந்த கதையை சொன்னார். 3 வருடங்களுக்கு முன்பே துவங்கிய படம் இது. கொரோனா லாக் டவுன், இந்தியன் 2 படத்தின் வேலையில் பிஸியான ஷங்கர் என பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்தது.


500 கோடி பட்ஜெட்: இந்த படத்திற்காக 500 கோடியை முதலீடு செய்திருக்கிறார் தில் ராஜூ. புஷ்பா 2 போல சூப்பர் ஹி அடித்துவிட்டால் அவருக்கு ஜாக்பாட். ஆனால். தோல்வி என்றால் பல நூறு கோடிகள் நஷ்டமடைந்துவிடும். ஆனாலும், படம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். அதற்கு காரணம் ஷங்கர் கொடுத்த நம்பிக்கைதான்.

தில் ராஜூ: கேம் சேஞ்சர் படத்தின் 5 பாடல் காட்சிகளுக்கு மட்டும் 75 கோடியை செலவு செய்துள்ளார் தில் ராஜூ. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே தில் ராஜூ தப்பிக்க முடியும். இதற்கிடையில்தான் இந்தியன் 2 படத்தின் தோல்வி அவர் அப்செட் ஆக்கியிருக்கிறது. இந்தியன்2 படம் தோல்வி என்றதும் ஆந்திராவில் உள்ள அவரின் நண்பர்கள் ‘ஷங்கரை நம்பி பணம் போட்டிருக்கீங்க. படம் அவ்வளவுதான்’ என அவரை பயமுறுத்திவிட்டனராம்.


இதனால் தில் ராஜூ அப்செட் ஆகிவிட்டாராம். இதைக்கேள்விப்பட்ட ஷங்கர் ‘பயப்படாதீர்கள். இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்’ என சொல்லியதோடு அந்த படத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய காட்சிகளை தில் ராஜூக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார். அதைப்பார்த்த பின்னரே தில் ராஜுவுக்கு இந்த படம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கும் அதிக செலவு செய்து வருகிறார் என சொல்கிறார்கள்.

இந்தியன் 3: அதேநேரம், இதே ஷங்கர் இந்தியன் 3 படத்தை லைக்காவுக்கு இதுவரை போட்டுக்காட்டவில்லை. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் லைக்கா புகார் கொடுத்த பின்னரே ‘படத்தை போட்டு காட்டுகிறேன்’ என அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story