டூரிஸ்ட் ஃபேம்லி படத்துக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கல... இயக்குனர் என்ஜாய் ஃபீலிங்!

டூரிஸ்ட் ஃபேம்லி படத்தை 24 வயதே ஆன அபிஷன் ஜீவந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். ஒரே படத்திலேயே மொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எடுத்த விதத்தில் அருமை அருமை என்று சொல்ல வைத்து விட்டார்.
ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தில் சசிக்குமார், சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை செம சூப்பராக உள்ளது. இப்படி ஒரு படமா என்ற அளவில் ஒரு ஃபீல் குட் படத்தைத் தந்து விட்டார் இயக்குனர் அபிஷத் ஜீவந்த்.
இவ்வளவுக்கும் இவர் எந்த ஒரு இயக்குனரிடமும் அசிஸ்டண்டாகக் கூட பணியாற்றவில்லை. ஆனாலும் ஒரு தரமான படத்தைக் கொடுத்து விட்டார். இந்தப் படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இப்போது ஒரு தகவலைக் கொடுத்துள்ளார். அது ரொம்பவே ஆச்சரியமாக உள்ளது. என்னன்னு பாருங்க.
டூரிஸ்ட் ஃபேம்லி திரைப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி படமாக அமையும் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்க்கல. 3 நாளைக்கு முன்னாடி ஃபேம்லியா நாங்க படத்துக்கு போகும்போது கூட எங்களுக்கு டிக்கெட் கிடைக்கல. நாங்க ட்ரை பண்ணியும் நிஜமாகவே டிக்கெட் கிடைக்கல. என்னடா நம்ம படத்துக்கு நமக்கே டிக்கெட் கிடைக்கலயா என்ற ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவந்த்.
சூர்யாவின் ரெட்ரோ படமும் டூரிஸ்ட் ஃபேம்லி படமும் ஒரே நாளில் தான் ரிலீஸ் ஆனது. இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்த போதும் சின்ன பட்ஜெட்டில் சிறப்பான ஒரு படமா என்று டூரிஸ்ட் ஃபேம்லி படத்தையே பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வசூலிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சக்கை போடு போட்டு வருகிறது.