ரிலீஸுக்கு முன்பே என் நம்பிக்கையை உடைக்க நினைச்சாங்க... மனம் நொந்த டிராகன் இயக்குனர்

by Sankaran |   ( Updated:2025-03-03 09:42:14  )
director aswath, pradeep
X

டிராகன் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் யதார்த்தமான நடிப்பு படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம். ஏற்கனவே லவ் டுடே படத்தின் தன்னோட திறமையை நிலைநாட்டியவர்.

வித்தியாசமான கதைக்களம்: டிராகன் படத்தின் வித்தியாசமான கதைக்களம் தான் சின்ன பட்ஜெட்டில் தயாரானாலும்கூட ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துள்ளது. படத்தில் என்ன விசேஷம் என்றால் முதல் நாளின் வசூலை விட 9 மற்றும் 10ம் நாள்களின் வசூல் அனைவரையும் அதிரச் செய்துள்ளது. முதல் நாளில் இந்திய அளவில் 6.5கோடிதான்.


பிளாக்பஸ்டர்: ஆனால் 9ம் நாளில் 8.5கோடி. 10ம் நாளில் 9கோடி வசூல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் படம் அந்தளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது. உலகளவில் 100கோடியை எட்டியது. இதை பிளாக்பஸ்டர் என பாக்ஸ் ஆபீஸில் அறிவித்தனர். இந்த நிலையில் டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மனம் நொந்துபோய் உருக்கமாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

நம்பிக்கையை உடைக்க நினைத்தனர்: டிராகன் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கும், அன்புக்கும் நன்றி. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சிலர் என் நம்பிக்கையை உடைக்க நினைத்தனர். ஆனால் 'நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்' என்று கூறிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் உள்ள சில தவறுகளை திருத்திக் கொண்டு எனது அடுத்த படத்தை நிச்சயமாக இன்னும் சிறப்பாக கொடுப்பென் என்று பேசியுள்ளார்.

டிராகன்: கடந்த பிப்ரவரி 21ம் தேதி டிராகன் படம் வெளியானது. கல்பாத்தி அகோரம் குழுவினர் தயாரித்துள்ளனர். படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன், காயடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் என 3 இயக்குனர்களும் நடித்துள்ளனர்.

படத்தில் பிரபல தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பனும் நடித்துள்ளார். உள்பட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இன்னும் ரசிகர்களின் வரவேற்பில் கொஞ்சம் கூட குறையில்லாமல் டிராகன் திரையரங்குகளை ஹவுஸ்புல்லாக்கி வருகிறான்.

Next Story