என்ன பாலா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு?.. ஷாக்கான சிவகுமார்.. பழிவாங்கிட்டீங்களே!..

by Ramya |
bala 25
X

bala 25

இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் பாலா. 1999 ஆம் ஆண்டு வெளிவந்த சேது என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தன்னை நிரூபித்துக் காட்டினார். அதன் பிறகு ஒவ்வொரு படங்களின் மூலம் ஒவ்வொரு புதுமையை கொடுத்தார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பாலாவின் படங்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாக அமைந்தது. தனது திரைப்படங்களின் மூலமாக பல நடிகர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குனர் பாலா. அப்படி இவரது இயக்கத்தில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் முன்னாடி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். அப்படி நாம் பல நடிகர்களை கூறலாம்.

விக்ரம், சூர்யா, ஆர்யா, ஆதவ், பூஜா, சங்கீதா என பல நடிகர்களுக்கு தங்களது படங்களின் மூலமாக மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கின்றார். இயக்குனர் பாலா திறமை இருந்தும் தன்னால் வெற்றி பெற முடியாமல் தவித்து வரும் பல கலைஞர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வெற்றியை கொடுத்து வருகின்றார்.


சமீப நாட்களாக பெரிய அளவு திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த பாலா நீண்ட இடைவெளிக்கு வணங்கான் என்கின்ற திரைப்படத்தை நடிகர் சூர்யாவை வைத்து இயக்க தொடங்கினார். படம் எடுக்க தொடங்கி சில நாட்களிலேயே இந்த திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். அதனை அடுத்து அருண் விஜயை வைத்து இந்த படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தார் பாலா.

இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவை பாலா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையும் கொண்டாடும் விழாவாக நடத்தி இருந்தார்கள்.

இந்த விழாவில் நடிகர் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, பாக்கியராஜ், மணிரத்தினம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு பாலா குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்கள். இந்த விழாவின் போது நடிகர் சிவகுமார் இயக்குனர் பாலாவை பேட்டி எடுத்தார். அவரிடம் பல கேள்விகளை கேட்டிருந்தார். அதில் ஒரு கேள்வி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த பேட்டியில் சிவக்குமார் நான் உயிரைக் கொடுத்து நடித்த பாடலான தகதகவென ஆடவா என்ற பாடலை பிதாமகன் படத்தில் ரீமேக் செய்து காமெடியாக மாற்றி விட்டீர்கள். உண்மையை சொல்லு எந்த ஐடியாவில் அப்படி பண்ண? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த பாலா அந்தப் பாட்டில் நீங்கள் ஆடியதும் உங்க கூட ஆடியவர்களை பார்க்கும்போது எனக்கு நகைச்சுவையாக இருந்தது.


அதனால்தான் அப்படி செய்தேன் என்று கூறினார். இதனை எதிர்பார்க்காத சிவகுமார் உடனே சிரித்துக்கொண்டு இரு உன் மேல் கேஸ் போடுகிறேன் என்று கலகலப்பாக கூறியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story