அதெல்லாம் தேவையில்ல... வாயை கூட திறக்காமல் விக்ரம் மகனுக்கு பாலா கொடுத்த நோஸ்கட்..
இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. தனது வித்தியாசமான படைப்புகள் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் இயக்கியது மொத்தமே எட்டு திரைப்படங்கள் என்றாலும் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது.
இவர் கடைசியாக இயக்கிய நாச்சியார் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்கின்ற திரைப்படத்தை இயங்கினார். அந்த திரைப்படம் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் நடிகர்களுக்காக கதை எழுதாமல் தனது கதைகளுக்கு சரியான நடிகரை தேர்வு செய்து அவர்களிடமிருந்து வேலை வாங்கக்கூடிய ஒரு திறமையான இயக்குனர்.
இவர் படங்களில் நடித்த பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்துக் கொடுத்தவர் இயக்குனர் பாலா. தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டுதான் என்று கூறி வந்த நிலையில் சமீப நாட்களாக இவர் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். பின்னர் சினிமா வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்தார். அதாவது அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்கின்ற பெயரில் ரீமேக் செய்திருந்தால் இயக்குனர் பாலா. இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படம் வெளியிட்டு இருக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் விக்ரம் படத்தில் உடன்பாடு இல்லை என்று கூறி படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டார்.
வாழ்க்கை கொடுத்த இயக்குனரையே விக்ரம் அவமானப்படுத்தி இருந்தது பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பாலா அது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு அமைதியாகிவிட்டார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யாவை வைத்து படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென்று சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இதற்கு பாலா தான் காரணம் என்று பலரும் கூறி வந்தார்கள். இந்த சர்ச்சைக்கும் சமீபத்தில் வணங்கான் ஆடியோ லான்ச் விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா மற்றும் பாலா. ஒரு வழியாக இந்த திரைப்படத்தை அருண் விஜயை வைத்து எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் பாலா. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இயக்குனர் பாலா தற்போது பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் தனது திரை வாழ்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். அப்படி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாலாவிடம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து எடுக்கப்பட்ட வர்மா திரைப்படத்தின் சில காட்சிகளில் அப்படியே சேது படத்தில் விக்ரமை பார்ப்பது போன்று இருப்பதாக ஆங்கர் கூறியிருந்தார்.
அதற்கு பாலா அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அடுத்த கேள்வியை கேளுங்கள் என்று கூறிவிட்டார். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. இதற்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் விக்ரம் குறித்த கேள்விக்கும் எந்தவித பதிலையும் அவர் அளிக்கவில்லை.
தற்போது அவரது மகன் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் பாலா இருந்தது இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை வெளிக்காட்டுகின்றது. தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனரையே விக்ரம் அவமானப்படுத்தி இருக்கின்றார். அதனால் தான் பொதுவெளியில் அவரை குறித்து பேசுவதற்கு பாலா முன் வரவில்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.