அடுத்த படத்துக்கு இவ்வளவு கோடி சம்பளமா?!.. புரடியூசர ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாரே பாலா!...
Director Bala: பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றவர் பாலா. சேது திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரின் முதல் படமே ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படம் உருவாகி பல மாதங்கள் ரிலீஸாகாமல் இருந்தது. ஏனெனில், இந்த படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள் படம் நன்றாக இருந்தாலும் ஓடாது என்றே நினைத்து வாங்க தயங்கினார்கள்.
ஒருவழியாக படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பாலாவுக்கு ரசிகர்களும் உருவானார்கள். அடுத்து சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அம்மா பாசத்துக்கு ஏங்கும் வேடத்தில் சூர்யா சிறப்பாகவே நடித்திருந்தார். இந்த படம்தான் அவருக்கு காக்க காக்க பட வாய்ப்பை பெற்று தந்தது.
இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து விக்ரம் சூர்யா என இருவரையும் வைத்து பிதாமகன் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சியான் விக்ரம் வசனம் எதுவும் பேசாமல் நடித்து தேசிய விருது வாங்கினார். இந்த படத்தில் சூர்யா ஒரு முழுநடிகராகவே மாறியிருந்தார்.
அதன்பின் ஆர்யாவை வைத்து நான் கடவுள் படத்தை இயக்கினார். பிச்சை கேட்கும் மனிதர்களின் வாழ்வியலையும், அவர்களுக்கு பின்னால் இருக்கும் குரூர மனிதர்கள் பற்றியும் இப்படத்தில் காட்டினார். இந்த படத்திற்கு தேசிய விருதும் வாங்கினார் பாலா. அதன்பின் அவன் இவன், பரதேசி, நாச்சியார் போன்ற படங்களை இயக்கினார்.
இப்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அருண் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த படம் இதுவரை 8 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பாலா இயக்கும் அடுத்த படத்தை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தயாரிக்கவிருக்கிறாராம். இந்த படத்திற்கு பாலாவுக்கு 8 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.