ரஜினி கமலை வச்செல்லாம் படம் பண்ணமுடியாது!.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்!..
இயக்குனர் பாலா: இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் பாலா. பல வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாலா, பின்னர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த சேது என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என தன்னுடைய சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையை பதித்துக் கொண்டவர் இயக்குனர் பாலா. இவரது படங்கள் தற்போது வரை 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 14 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலருக்கும் வாழ்க்கை கொடுத்தவர் பாலா. விக்ரம் தொடங்கி சூர்யா, விஷால், ஆர்யா போன்ற பல நடிகர்கள் இவரின் திரைப்படங்களில் நடித்ததால் புகழுக்கு சென்றிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கின்றார் இயக்குனர் பாலா.
இவர் கடைசியாக வணங்கான் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த படத்தை முதலில் சூர்யாவை வைத்து எடுத்து வந்த நிலையில் சில பல காரணங்களால் சூர்யா அந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டார். பின்னர் நடிகர் அருண் விஜயை வைத்து பாலா இந்த திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார்.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ஆக மட்டுமில்லாமல் பாலா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழாவாகவும் இருந்தது. இந்த விழாவிற்கு நடிகர் சூர்யா, தந்தை சிவக்குமார் தொடங்கி சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு பாலா குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யா கலந்து கொண்டிருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. ஏனென்றால் வணங்கான் திரைப்படத்தால் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறி வந்த நிலையில் அந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் சூர்யா. மேலும் மேடையில் இயக்குனர் பாலா குறித்து மிக நெகழ்ச்சியாகவும் நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் பாலா அண்ணன் தான் என்று அவர் பேசியிருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான சிவகுமார் சில கேள்விகளை பாலாவிடம் கேட்கின்றார். அதற்கு பாலா பதில் அளிக்கின்றார். அப்படி சிவக்குமார் நீங்கள் கமல், ரஜினி போன்ற ஹீரோக்கள் உங்களுக்கு கால்ஷீட் கொடுத்தால் அவர்களை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பாலா கூறியிருந்ததாவது 'வாய்ப்பு இல்லை சார், அவர்களின் பாதை வேறு என்னுடைய பாதை வேறு என்று கூறியிருந்தார். உங்க பாதைக்கு வந்து அதாவது அகோரி போன்று நடிகர் ரஜினி நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டால் நீங்கள் இயக்குவீர்களா? என்று சிவகுமார் கேட்டிருந்தார். அப்படி அவர் கூற மாட்டார் என்று உறுதியாக தெரிவித்தார் இயக்குனர் பாலா. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.