நான் மணிரத்னமோ, ஷங்கரோ இல்ல!.. சீறிய பாலா!.. அப்படி என்ன கேட்டாங்க!..
Director Bala: தமிழ் சினிமா பல இயக்குனர்களை பார்த்திருக்கிறது. அவர்கள் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். ஆனால், மனதை உலுக்கும் படி சில இயக்குனர்கள் மட்டுமே படமெடுப்பார்கள். பாரதிராஜா, மகேந்திரன் என சிலர் மட்டுமே அப்படி இருப்பார்கள். அந்த வரிசையில் வந்தவர்தான் இயக்குனர் பாலா.
இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர். சேது திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படம்தான் நடிகர் விக்ரமை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியதோடு, அவரின் பெயருக்கு முன்னர் சியான் என்கிற அடைமொழியும் வர காரணமாக இருந்தது.
இந்த படம் ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கென ரசிகர்களும் உருவானார்கள். அதன்பின் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். இந்த படத்தில்தான் நடிப்பென்றால் என்ன என்பதை சூர்யா கற்றுக்கொண்டர். இந்த படத்தால்தான் அவருக்கு காக்க காக்க பட வாய்ப்பு கிடைத்தது.
அதேபோல், தான் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவை சிறப்பாக நடிக்க வைத்திருந்தார் பாலா. அதோடு, விக்ரமுக்கு அப்படி ஒரு வேடத்தை எந்த ஒரு இயக்குனரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்த படம் விக்ரமுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அதேபோல், ‘நான் கடவுள்’ படத்தில் லவ்வர் பாயான ஆர்யாவை அகோரியாக மாற்றியிருந்தார் பாலா. இந்த படம் பாலாவுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. மேலும், பரதேசி படத்தில் அதர்வாவை வேறு மாதிரி காட்டியிருந்தார்.
தற்போது வணங்கான் படத்தில் அருண் விஜயை காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் பாலா. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் ‘உங்கள் படத்தின் ஹீரோக்கள் மட்டும் தனித்துவமாக தெரிகிறார்களே எப்படி?’ என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் சொன்ன பாலா ‘ நான் ஷங்கர் சாரோ, மணிரத்னம் சாரோ கிடையாது. நான் ஒரு நல்ல தொழில்நுட்ப கலைஞனும் கிடையாது. நான் ஒரு காதை சொல்லி. நான் நடிகர்களுக்கு எதையும் சொல்லி கொடுப்பதும் இல்லை. அவர்களிடம் உள்ள குறைகளை களையெடுக்கிறேன். அதனால் பயிர் தனியாக தெரிகிறது. அவ்வளவுதான்’ என சொல்லி இருக்கிறார்.