கமல் கிட்ட அந்த வார்த்தையை சொல்லிப்பாருங்க! இதுக்கு ரஜினியே பரவாயில்ல

rajinikamal
தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இரு நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். வெவ்வேறு தலைமுறைகளை கடந்து இவர்களுடைய படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருவருமே வெவ்வேறு பாணிகளில் திரைப்படங்களில் நடித்தாலும் இப்போது வரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு இவர்களுடைய படங்கள் தான் இன்ஸ்பிரேஷன். ரஜினி என்றால் ஸ்டைல், கமல் என்றால் நடிப்பு.
அப்படித்தான் இன்றைய தலைமுறை நடிகர்கள் அவர்களை ஃபாலோ செய்து வருகிறார்கள். இருவருமே தமிழ் சினிமாவிற்காக பெரும் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். ரஜினியின் படங்களை பொறுத்தவரைக்கும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. கமல் படங்கள் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கின்றன. அதைப்போல அரசியலிலும் வெவ்வேறு பாதைகளில் இவர்கள் பயணித்ததுண்டு .ஆனால் இப்போது ரஜினி ஆன்மீக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
கமல் சமீபத்தில் தான் பாராளுமன்ற எம்பி ஆகியிருக்கிறார். இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் இரு தூண்களாகவும் அனைவரும் கொண்டாடப்படும் பெரிய ஆளுமைகளாகவும் இவர்கள் திகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரும் விநியோகஸ்தருமான பாரதி கண்ணன் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவருடன் தான் பயணித்த அனுபவங்களை பற்றி கூறியிருக்கிறார்.
ரஜினியை விட கமல் மிகவும் எமோஷனல் என பாரதி கண்ணன் கூறினார். அதற்கான ஒரு உதாரணத்தையும் தெரிவித்திருக்கிறார். பாண்டியன் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது அதை பாரதி கண்ணன் தான் வாங்கினாராம். படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதனால் ரஜினியை பார்க்க பாரதி கண்ணன் மற்றும் சிலர் சென்றிருக்கின்றனர். அப்போது படத்தின் ரிசல்ட் ஏற்கனவே ரஜினிக்கு தெரிந்திருக்கிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு படத்தில் கொஞ்சம் ஓவராக நடித்து விட்டேன். பழைய ஸ்டைலையும் பின்பற்றி விட்டேன்.
அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை தானே என கேட்டாராம் .லாபம் வரவில்லை என்றாலும் பெரிய அளவு நஷ்டம் இல்லை என்பது தான் எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது என படு கூலாக பேசியிருக்கிறார் ரஜினி .இதே மாதிரி கமலின் குணா படத்தையும் பாரதி கண்ணன் தான் வாங்கினாராம் .ஆனால் படம் சுமார்.
இதை கமலிடம் நேராக கூறினாராம் பாரதி கண்ணன். இந்த சுமார் என்ற வார்த்தையை கேட்டதும் கமலுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டதாம். உடனே சுமார் என்றெல்லாம் சொல்லாதீர்கள் .படம் எப்படிப்பட்ட ஒரு படம் தெரியுமா? மக்கள் அதை ரசிக்க வேண்டும். இனிமேல் இப்படி சுமார் என்று கூற வேண்டாம் என கோபப்பட்டு சென்று விட்டாராம் .இதை கமலுக்கு பின்னாடி இருந்த அவருடைய மேனேஜர் பார்த்து பாரதி கண்ணனிடம் இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறி அவர் எவ்வளவு தொகைக்கு படத்தை வாங்கினாரோ அதில் ஒன்றரை லட்சம் திருப்பிக் கொடுத்தாராம் கமலின் மேனேஜர் .இதை ஒரு பேட்டியில் பாரதி கண்ணன் கூறினார்.