நடிகன் பின்னால் போகாதே!.. பொழப்ப பாரு!.. விஜய் விஷயத்தில் பொங்கிய இயக்குனர்!...

Vijay: நடிகர் விஜய் தவெக எனும் அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிவிட்டார். அதேநேரம் அவர் இன்னும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை. அரசியலை எப்படி செய்வதென்றே அவருக்கு தெரியவில்லை பலரும் அவரின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்கள். அதிலும், கரூரில் நடந்த சோக சம்பவம் விஜயின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாகவே அமைந்துவிட்டது.
கரூர் சம்பவம் நடந்தபோது விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் அவர் நிற்கவில்லை. அந்த சம்பவத்திற்கு அவர் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலும் சொல்லவில்லை என திமுகவினர் உள்ளிட்ட சில அரசியல்கட்சிகள் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஆனால் கரூர் சம்பவத்தின் பின்னனியில் சதி நடந்துள்ளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெகனர் சொல்லி வந்தார்கள். அதோடு தவெக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஒரு பக்கம் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. நீதிபதியும் இந்த வழக்கை விசாரித்தும் விஜய்க்கு எதிராக கருத்துக்களை கூறினார்.. அதுவும் ‘விஜய்க்கு தலைமை பொறுப்பு இல்லை’ என்றெல்லாம் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஒருபக்கம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்ததற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பை காட்டியுள்ளது. அதோடு சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது. ஒருபக்கம் விஜயின் அரசின் செயல்பாடுகளை இயக்கம் சேரன் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்.என்னுடைய தலைவன் எனக்கு ஒரு பிரச்சனை எனில் வந்து என்னுடன் நிற்பான் என்கிற நம்பிக்கையை ஒரு அரசியல் தலைவர் உருவாக்க வேண்டும். முடியவில்லை என்றல் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். ரசிகன் மன்றமக இருக்கும் வரை விஜயை யாரும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் எங்களை ஆள வேண்டும் என்று எப்போது வருகிறீர்களோ அப்போதுதான் இந்த கேள்வி’ என்று ஏற்கனவே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக கெட்ட துவங்கினார்.
இந்நிலையில் ‘அவனவன் சம்பாதித்து விட்டு உன்னை காப்பாற்ற வருகிறான். நீயும் சம்பாதித்து விட்டு அவனை காப்பாற்ற போ.. அரசியல் இங்கே வியாபாரம் ஆகிவிட்டது. அதனால் தான் நம்மை காசு வாங்குற கூட்டமாக மாற்றி வச்சிருக்காங்க.. நீயும் அதை வியாபாரமாக பார்க்க கூடாது. எனக்கு எதுக்கு காசுன்னு திருப்பி கேளு.. சேவை பண்றவனுக்கு மட்டும் ஆதரவு கொடு’ இங்கே என்ன பேசினாலும் எதுக்குன்னு யோசிக்காத ஒரு கூட்டம் வந்து குறைச்சுக்கிட்டே இருக்கு.. நல்லது.. குறைக்கட்டும்.. நம்ம வேலை அவங்க மண்டையில உரைக்க வரைக்கும் சொல்றதுதான் ..சொல்லிக்கொண்டே இருப்போம்.. நடிகர் பின்னால் போகாத.. பொழப்ப பாரு.. அப்பா ஆத்தாளை பாரு.. அரசியல் வியாபாரமோ, கேளிக்கையோ இல்லை’ என கோபமாக பதிவிட்டிருக்கிறார்.