விஜய்சேதுபதி கூட படம் பண்ண மறுத்த சேரன்... எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்..!

by Sankaran |   ( Updated:2024-12-30 08:09:37  )
vijaysethupathi, cheran
X

நடிகர் விஜய்சேதுபதி இப்போது தமிழ்சினிமாவில் ரொம்ப பிசியான நடிகர் ஆகிவிட்டார். சினிமா ஒரு பக்கம், பிக்பாஸ் ஒரு பக்கம் என போய்க் கொண்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளார். சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். அதன்பிறகு தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்த அவருக்கு யதார்த்தமான நடிப்பு கைகொடுத்தது.

வேறு எந்த நடிகரின் சாயலும் இல்லாமல் இவர் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு நடித்தார். தனது திறமைகளைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டார். நடிகராக இருந்து தயாரிப்பாளர், பாடகர், ஆங்கர், பாடல் ஆசிரியர் என பன்முகத்திறமைகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

இவரது படங்களான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடிதான், சேதுபதி, சூது கவ்வும், 96 மற்றும் மகாராஜா போன்ற படங்கள் வெற்றிவாகை சூடின. பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தபோதும் படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.

இவர் வில்லனாக நடித்த மாஸ்டர், பேட்ட, ஜவான், விக்ரம் ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவருடன் இணைந்து பணியாற்ற நடிகர் சேரன் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது முடியாமல் போனது. இதுகுறித்து இப்போது ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

maharaja

விஜய்சேதுபதி கூட ஒரு படம் பண்றதா இருந்தது. அதை பண்ணல. இனிமேல் பண்ணவும் முடியாது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்குது. அவர் இப்போது அபார வளர்ச்சி அடைந்துவிட்டார். அவருக்கான கதைகளை மாற்றப்பட வேண்டும்.

இன்னொன்னு அவர் ரொம்ப பிசியாகி விட்டார். கண்டிப்பா ஒரு பத்து வருஷத்துக்கு டேட் கிடைக்காது. அதனால இப்போதைக்கு அதை பண்ணுவதற்கான அதைப் பண்ணுவதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார் சேரன்.

சேரன் தமிழ்சினிமா உலகில் ஒரு சிறந்த இயக்குனர். நல்ல நடிகரும்கூட. இவரது படங்களில் வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் பேசப்பட்டன. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதனால் இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்தால் படம் சூப்பர்ஹிட் ஆகும். அது வேற லெவலில் இருக்கும். ஆனால் இந்தக் காம்போ சேர இன்னும் 10 வருஷமாகும் என்ற ரீதியில் சேரன் சொல்லாமல் சொல்லிவிட்டாரே. இருவரும் மனது வைத்தால் கண்டிப்பாக அதற்கு முன்பே கூட படத்தில் இணைந்து பணியாற்றலாம் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

Next Story