சூர்யாவுக்கு நான் ஏன் நன்றி சொல்லணும்? என்ன சொல்ல வர்றார் ஞானவேல்?

by BALU |
t.j.gnanavel, surya
X

சமீபத்தில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் வேட்டையன். த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் வசூல் 120 கோடியை நெருங்கியுள்ளது. இந்தப்படத்தை கோட் படத்தின் வசூலுடன் ஒப்பிடுகிறார்கள். அது பெரிய பட்ஜெட் படம். இது சின்ன பட்ஜெட் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இது இயக்குனர் படமா, ரஜினி படமா என்று பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இது இயக்குனர் படம் தான். அதில் ரஜினி என்ற கமர்ஷியலைக் கலந்துள்ளார்கள். அவ்வளவு தான்.

த.செ.ஞானவேல் இயக்கிய முதல் படம் கூட்டத்தில் ஒருத்தன். இது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அப்படி இருந்தும் அவருக்கு சூர்யா ஜெய்பீம் படத்திற்காக சம்மதித்துள்ளார். அந்தக் கதையின் காரணமாக படம் மாஸ் ஹிட் ஆனது. அந்த வகையில் ஞானவேல் சூர்யாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது இன்னொரு நன்றியையும் அவர் சொல்லி இருக்கிறார். அது என்னன்னு பார்ப்போம்.


சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற படத்தை இயக்கி பெரும் புகழைப் பெற்றார் இயக்குனர் த.செ.ஞானவேல். இவரது இந்தப் படத்தை கொரோனா காலகட்டம் என்பதால் ஓடிடியில் தான் வெளியிட்டார்கள். ஆனால் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இது மட்டும் திரைக்கு வந்து இருந்தால் இன்னும் வேற லெவலுக்குச் சென்று இருக்கும்.

ஜெய் பீம் படத்தைப் பார்த்ததும் தான் ரஜினியே இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாராம். அது தான் வேட்டையன். ஜெய்பீம் படத்திற்குப் பிறகு இன்னொரு கதையை சூர்யாவுக்காக ஞானவேல் தயார் செய்து கொண்டு இருந்தாராம். அப்போது தான் வேட்டையன் படத்திற்கான வாய்ப்பு அவருக்கு வந்ததாம். உடனே சூர்யா இதுபற்றிக் கேள்விப்படுகிறார். அவர் இயக்குனரிடம் சொன்னது என்ன தெரியுமா? அதை ஞானவேல் வாயிலாகக் கேட்போமே...

ஜெய்பீம் படத்துல சூர்யா சார் வந்து இன்னைக்கு உலகம் முழுக்க ஒரு கவனிப்பை ஏற்படுத்துற அளவுக்கு ஒரு வாய்ப்பு உருவானது. இன்னொரு காரணம் சூர்யா சாருக்கு ஒரு படம் பண்றதுக்கு நான் ரெடி ஆகிட்டு இருந்தேன். அந்த டைமிங் எனக்கு வேட்டையன் வாய்ப்பு வருது. அப்போ 'இது உங்களுக்கு கிடைச்சிருக்கிற நல்ல வாய்ப்பு. நம்ம மீண்டும் கூட பண்ண முடியும். இதை மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு சொன்னவர் சூர்யா தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story