எங்கிட்ட சரக்கு இருக்கு... ஆனா ரஜினின்னு வந்துட்டா அதெல்லாம் அப்புறம்தான்..! இயக்குனர் சொல்றதைப் பாருங்க...

by sankaran |   ( Updated:2024-10-14 07:30:49  )
vettaiyan
X

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ரஜினியுடன் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத்பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்பட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆகி இருக்கிறது. படத்தில் ஓபனிங் சாங்காக வரும் மனசிலாயோ பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

வேட்டையன் படத்தில் கல்விக் கொள்ளையைப் பற்றி எடுத்துள்ளார்கள் என்பதற்காக ஒரு சிலர் எதிர்த்து வருகின்றனர். அதே நேரம் ரஜினி எப்போதுமே என்கவுண்டருக்கு ஆதரவானவர் என்றும் இந்தப் படத்தில் அவர் செய்த ஒரு சம்பவத்தைத் தவறு என்று அமிதாப் சுட்டிக்காட்ட அவரும் ஒரு கட்டத்தில் அதை உணர்கிறார்.

அதனால் அது ரஜினி ரசிகர்களைக் கவரவில்லை என்றும் சொல்கிறார்கள். ரஜினி ரசிகர்களைப் பொருத்தவரை ரஜினி எது செய்தாலும் சரியாகத் தான் இருக்க வேண்டும். அதைத் தவறுன்னு இன்னொருவர் சொல்லக்கூடாது. அதுதான் பிடிக்காததற்குக் காரணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முதன்முறையாக ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இவர்களுக்குள் காம்போ ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா என்றால் இது இயக்குனர் படம் என்றே சொல்ல வேண்டும். ரஜினிக்காக சில கமர்ஷியல் மசாலாக்களைத் தடவியுள்ளார்கள். பாசிடிவ்வான விமர்சனங்களே வந்தன.


ரஜினியின் வழக்கமான பார்முலாவை உடைத்து வந்துள்ளதால் ரசிகர்கள் பலருக்கும் இந்தப் படம் பிடிக்கவில்லை என்றும் பேசப்பட்டது. வேட்டையன் குறித்து இயக்குனர் த.செ.ஞானவேல் சொல்வது இதுதான்.

மாஸ் விஷயங்கள் இல்லாம படம் பண்ண முடியாது. என்ன தான் நான் கன்டன்ட் வச்சி இருந்தாலும், ரஜினி சாரை மாதிரி ஒருத்தர வச்சி படம் பண்றப்ப மாஸ் விஷயங்கள் இல்லாம படம் பண்ண முடியாது.

அதுக்கு சரியான சப்போர்ட்டா அனிருத் இருந்தார். அவரும் இப்படிப்பட்ட ஜானர் பண்ணினது இல்லை. அதனால அவருக்கும் இந்தப் படம் ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு என்கிறார் ஞானவேல்.

4வது நாளில் வேட்டையன் படம் சர்வதேச அளவில் ரூ.160 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் நான்கு நாள்களில் ரூ.8.2 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

Next Story