ரொம்ப ஓவறா போறாங்க!.. கடுப்பான ஹெச்.வினோத்!.. ஜனநாயகன் அப்டேட்!...

Jananayagan: சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் ஹெச்.வினோத். அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். அஜித்துக்கு வினோத்தை பிடித்துப் போகவே தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வலிமை, துணிவு ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.துணிவு படத்திற்கு பின் விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கியிருக்கிறார்.
இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பகவத் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அதேநேரம் விஜய்க்கு ஏற்ற மாதிரியும், தமிழுக்கு ஏற்ற மாதிரியும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றது போலவும் கதை, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் தலைவராக கட்சித் தலைவராக மாறிவிட்டார். சமீபத்தில் அவர் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க மக்கள் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பான வழக்கில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் சில மாவட்டங்களுக்கு சென்று அங்கு மக்கள் முன்பு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ட்ரோன்கள் மூலம் மக்கள் கூடுவதை தவெக சார்பில் வீடியோ எடுக்கப்பட்டு வந்தது. அதை தவெகவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வந்தனர். கரூரிலும் அப்படி வீடியோ எடுக்கப்பட்டது.
கரூரில் சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தார்கள். இது தொடர்பான வீடியோக்கள் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த காட்சிகளை ஜனநாயகன் பயன்படுத்துவதற்காக ஹெச்.வினோத் எடுத்தார் என சிலர் கிளப்பி விட்டார்கள். அதை சிலர் நம்பியும் வருகிறார்கள். இதைக் கேட்டு அப்செட் ஆன ஹெச்.வினோத் ‘படத்தின் ஷூட்டிங் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது.
இப்படியெல்லாம் பொய்யாக வதந்தி பரப்புகிறார்கள்’ என நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பி இருக்கிறார். அதோடு இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடவும் தயாராகி விட்டாராம். ஆனால் ‘இது பெரிய அரசியல் விளையாட்டு. இதற்குள் நீங்களாக போய் சிக்காதீர்கள். அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என நட்பு ஊட்டாரங்கள் சொன்னதால் அமைதியாக விட்டாராம்.