Dude: 2கே கிட்ஸ்களுக்கு செண்டிமெண்ட்டே இல்லையா?!.. பாக்கியராஜ் பொங்கிட்டாரே!...
கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமாகி லவ் டுடே என்கிற படத்தை இயக்கி நடித்து அதன்பின் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து எல்லா படங்களிலும் ஹிட் கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். அவர் நடிப்பில் உருவாகி தீபாவளி காரணமாக கடந்த 17ஆம் தேதி வெளியான டியூட் திரைப்படமும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. 100 கோடி வசூலை இப்படம் தாண்டிவிட்டது. குறிப்பாக ஜென்சி (GEN Z) என சொல்லப்படும் 2k கிட்ஸ்தான் பிரதீப் ரங்கநாதன் படங்களை அதிகம் ரசிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
அதாவது 20 வயதில் இருந்து 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்தான் பிரதீப் பிரதீப் ரங்கநாதனின் படங்களை அதிகம் பார்க்கிறார்கள். அவர்களால்தான் டூயட் படமும் ஓடுகிறது. 2கே கிட்ஸ்களுக்கு கலாச்சாரமும் தெரியவில்லை. செண்டிமெண்ட்டும் இல்லை’ என பொங்குகிறார்கள் சிலர். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான டியூட் படத்தில் முற்போக்கு சிந்தனை என்கிற பெயரில் கலாச்சாரத்தை சீரழிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக 40,50 வயதிற்கு மேற்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.
2கே கிட்ஸ் இல்லையென்றால் இந்த படம் பிளாப் ஆகியிருக்கும் என்றெல்லாம் அவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் இதுபற்றி கருத்து தெரிவித்த திரைக்கதை மன்னனும், இயக்குனருமான கே.பாக்கியராஜ் ‘2k கிட்ஸ்களுக்கு சென்டிமெண்டே இல்லை என சொல்வதை ஏற்க முடியாது. அவர்களுக்கும் அப்பா, அம்மா சென்டிமென்ட் எல்லாம் இருக்கிறது. காதல் விஷயத்தில் வேண்டுமானால் அவர்கள் அப்படி இருக்கலாம்.
ஆனால் எல்லா விஷயத்திலும் அவர்கள் செண்டிமெண்ட்டே இல்லாமல் இருப்பார்கள் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. 2கே கிட்ஸ்கள் டியூட் மாதிரி படங்களை ஓட வைப்பார்கள் என்றால், இந்த மாதிரி பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அந்த படங்கள் எல்லாவற்றையும் அவர்கள் ஓட வைத்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே’ என பாயிண்ட்டோடு பேசி இருக்கிறார்.
