1 இல்ல மொத்தம் 3 கதை சொல்லிருக்காராம்!.. விஜயிற்காக காத்திருக்கும் அஜித் பட இயக்குனர்..!

by Ramya |
vijay
X

Actor Vijay: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை நடத்தும். இவரை வைத்து படம் இயக்குவதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நீ நான் என்று போட்டி போடுவார்கள். இவர் தற்போது தனது கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கி வருகிறார்.

மேலும் கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கின்றது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு தமிழ் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால் பதிக்க இருக்கின்றார். ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், அதனை தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் சிறப்பாக நடத்தி முடித்து இருக்கின்றார்.


படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் கட்சி வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார் விஜய். நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபித்தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படி தளபதி 69 திரைப்படத்தில் நடிகர் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் தான் இவரின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இருப்பினும் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவராக நிச்சயம் விஜய் இருப்பார் என்று அவரின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து மகிழ் திருமேனி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நான் கழகத் தலைவன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு நடிகர் விஜய் சந்தித்தேன்.

அவரிடம் மூன்று கதைகளை கூறினேன். அந்த 3 கதையுமே அவருக்கு பிடித்திருந்தது. அதில் எந்த கதையை தேர்வு செய்வது என்று தெரியாமல் அவர் குழப்பத்தில் இருந்தார். நான் ஒரு கதையை தேர்வு செய்தேன் அவர் ஓகே என்று கூறிவிட்டார். அப்போது நான் உதயநிதி ஸ்டாலினை வைத்து கழகத்தலைவன் என்கின்ற திரைப்படத்தை இயக்க இருந்தேன்.


உதயநிதி ஸ்டாலினை வைத்து கழகத்தலைவன் திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட் செய்திருந்ததை விஜய் சாரிடம் கூறியிருந்தேன் அவரும் ஒன்றும் பிரச்சனை இல்லை அந்த திரைப்படத்தை முடித்துவிட்டு நாம் படம் செய்வோம் என்று கூறியிருந்தார். நடிகர் விஜய்க்கு கூறிய 3 கதைகளுமே தன்னிடம் தற்போது இருக்கின்றது. ஒரு வேலை அவர் மீண்டும் நடிக்கும் சூழல் உருவானால் நிச்சயம் அவரை வைத்து திரைப்படம் இயக்குவேன்' என்று கூறியிருக்கின்றார். இந்த செய்தி தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Next Story