வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு!.. இயக்குனர் மோகன் ஜி கைது!....

Mohan G: ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாகவும், தாழ்த்தப்பட்ட சாதியினரை விமர்சிக்குமாறும் தொடர்ந்து படமெடுத்து வருபவர் இயக்குனர் மோகன் ஜி. பாமக கட்சியை ஆதரிப்பவர் இவர். பாமக நிறுவனம் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் மிது பெரிய மரியாதையும், அவர்களின் கொள்கைகளையும் பின்பற்றுபவர் இவர்.

எனவே, இவருக்கு மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்ற இயக்குனர்களை பிடிக்காது. எனவே, அவர்களின் படங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் வண்ணாரப்பேட்டை. இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் 4 வருடங்கள் கழித்து திரௌபதி என்கிற படத்தை இயக்கினார்.

இதில், தாழ்த்தப்பட்ட சாதியினர்தான் தவறு செய்கிறார்கள் என்பது போல காட்சிகளை அமைத்திருந்தார். நடிகை ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் ரிஷி இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் விவாதங்களை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களில் மோகன் ஜி-யை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதன்பின் ருத்ர தாண்டவம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்திலும் அதே போன்ற கருத்துக்களையே சொல்லி இருந்தார். அதன்பின், இயக்குனர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து பகாசூரன் என்கிற படத்தை இயக்கினார். சமீபத்தில், திருப்பதி லட்டு செய்யப்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக செய்திகள் பரவியது.

இந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போது, பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக மோகன் ஜி கருத்து கூறியிருந்தார். எனவே, அவர் மீது சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it