மிஸ்கின் பேச்சை ரசித்த இயக்குனர்கள்!.. ஒருத்தர் கூட தடுக்காதது ஏன்?.. வலுக்கும் கண்டனம்..

by Ramya |
misskin
X

இயக்குனர் மிஷ்கின்: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் மிஷ்கின். தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கின்றார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது.

திரைப்படங்களை இயக்கி வந்தாலும் மற்றொருபுறம் பிற திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் நேற்று முன்தினம் நடந்த பாட்டில் ராதா திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டார் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை ஆபாசமான வார்த்தைகளால் அவர் பேசியிருந்தது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பாட்டில் ராதா என்ற திரைப்பட விழாவில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லிங்குசாமி, மிஷ்கின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் மற்ற இயக்குனர்கள் மிகவும் சிறப்பாக பேசியிருந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு மட்டும் கடும் விமர்சனங்களை சந்தித்து இருக்கின்றது.


அதிலும் தான் ஒரு குடிகாரன் என்றும், என்னை குடிகாரனாக மாற்றியது இளையராஜா தான் எனவும், குடிக்க ஆரம்பித்தால் சினிமா பற்றி பேசுவோம். முக்கியமாக இளையராஜா தான் பலரை குடிகாரனாக மாற்றியது. அவர்தான் குடிக்கு ஆரம்பப்பள்ளி. இந்த போதைகளை விட இளையராஜா தான் மிகப்பெரிய போதை என இளையராஜாவையும் ஒருமையில் பேசியிருந்தார்.

இந்த பேச்சானது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில் சினிமா விமர்சகர்கள் மிஷ்கினின் இந்த பேச்சுக்கு தொடர்ந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்தத் திரைப்படம் குடியால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக் கூறும் திரைப்படமாக இருந்தது. ஆனால் மிஷ்கின் பேசியது பலரையும் குடிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் குடித்தால் கிடைக்கும் நலன்கள் என்பதுபோல பேசியிருந்தார்.

அதிலும் வார்த்தைக்கு வார்த்தை கெட்ட வார்த்தைகளை பேசியிருந்தது பலரையும் முகம் சுழிக்க வைத்திருந்தது. ஆனால் மேடையில் இருந்த பல முக்கிய இயக்குனர்கள் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கைத்தட்டி சிரித்து மகிழ்ந்தார்கள். அதிலும் இயக்குனர் பா ரஞ்சித் ஒரு படி மேலே சென்று கைதட்டி குதித்து குதித்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இயக்குனர் மிஷ்கின் ஆரம்பத்தில் கெட்ட வார்த்தைகளை கூறி பேச தொடங்கியதுமே அங்கிருந்த ஒரு இயக்குனர் கூட ஏன் அவரை தடுக்கவில்லை. இப்படி பேச வேண்டாம் என்று ஒருவர் கூட சொல்லாதது ஏன்? மேலும் பத்திரிகையாளர்களில் ஒருவர் கூட அவரின் பேச்சை தடுக்காதது ஏன்? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

சினிமாவில் முக்கிய இயக்குனர்களாக இருக்கும் வெற்றிமாறன், பா ரஞ்சித், அமீர் ஆகியோரெல்லாம் சமூகப் பொறுப்புள்ள இயக்குனர்கள் தானா? இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவு இருக்கின்றதா? என்று வலைப்பேச்சு சேர்ந்த பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகியோர் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்கள். மேலும் இயக்குனர்கள் சங்கம் குறைந்தபட்சம் மிஷ்கினின் ஆபாச பேச்சுக்கள் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Next Story