ஜெயிலர் 2-வுக்கு பின் அந்த ஹீரோவுடன் இணையும் நெல்சன்!.. இது வேறலெவல் காம்போ!....

Jailer 2: விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் இயக்குனர் நெல்சனும் ஒருவர். சிம்புவை வைத்து ஒரு படத்தை துவங்கி அது பாதியில் நின்று போனது. அதன்பின் சில வருடங்கள் கழித்து நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்கிற படத்தை இயக்கினார்.

நெல்சனின் படங்களில் டார்க் காமெடி ரசிகர்களால் ரசிக்கப்படும். கோலமாவு கோகிலா படத்தில் பல டார்க் காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அந்த படம் வெற்றி பெற்றதும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். வழக்கமாக பேசிக்கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயனை அதிகம் பேசாமல் நடிக்க வைத்தார் நெல்சன்.

இந்த படத்திலும் நிறைய டார்க் காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில்தான் பிரியங்கா மோகன் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வரை வசூல் செய்தது. அதன்பின் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை கொடுத்தார் நெல்சன். ஆனால், இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

சமூகவலைத்தளங்களில் நெல்சனை ட்ரோல் செய்தார்கள். அதன்பின் நெல்சனை ரஜினி நம்பியதன் விளைவுதான் ஜெயிலர் படம் உருவானது. ரஜினிக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக இப்படம் அமைந்தது. நெல்சனின் சம்பளமும் 50 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது ஜெயிலர் 2 படத்தின் கதையை எழுதி வருகிறார் நெல்சன்.

கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. இந்நிலையில், ஜெயிலர் 2-வுக்கு பின் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் நெல்சன். வழக்கமாக ஜூனியர் என்.டி.ஆர் படம் என்றால் சண்டை காட்சிகள் அதகளமாக இருக்கும்.


ஆனால், டாக்டர் பட ஸ்டைலில் டார்க் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக எடுக்க நெல்சன் திட்டமிட்டிருக்கிறாராம். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சமீபத்தில் தேவரா படம் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருக்கமாகிவிட்ட அனிருத் அவரிடம் நெல்சன் பற்றி சொல்லி இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறாராம். எனவே, இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க போகிறார் என சொல்ல தேவையில்லை.

Related Articles
Next Story
Share it