விக்ரம் , ஜெயிலர், லியோ வந்த பிறகு லைஃபே போச்சு! வருத்தத்தில் பேசிய பாண்டிராஜ்

pandiraj
சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது தலைவன் தலைவி திரைப்படம். விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக எந்தப் படங்களும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் தன்னை பற்றி பேச வைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஆனால் இந்த படத்திற்கு பின்னாடி அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதோ அவர் பேசியது:
இந்த மூன்று வருஷம் நான் பட்ட பாடு எங்கேயும் பட்டதில்லை. உதவி இயக்குனராக இருந்த போது பட்ட கஷ்டத்தை விட இயக்குனராக இருந்து இந்த மூன்று வருஷம் நான் பட்ட கஷ்டம் பயங்கரம். மன உளைச்சலாக மன ரீதியாக அசிங்கங்களா அவமானங்களா சேர்ந்து வேலை பார்த்தவர்களுடன் கூடவே நிறைய தயாரிப்பாளர்களுடன் நிறைய வார்த்தைகளை கேட்டுவிட்டேன்.
அதாவது என்னை எப்படி பார்த்தார்கள் என்றால், அப்பொழுது சினிமா மாறுகிறது. விக்ரம் மாதிரியான படங்கள், ஜெயிலர் மாதிரியான படங்கள் லியோ மாதிரியான படங்கள் ஓடும் போது பாண்டிராஜ் இனிமேல் ஊருக்கு போயிரலாம். அவர் படம் ஜெயிக்காது என என் காதுபடவே ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் என பல பேர் பேசியிருக்கிறார்கள். இனிமேல் கடைக்குட்டிச் சிங்கம் எல்லாம் ஓடாது சார்,
இனிமேல் நம்ம வீட்டுப் பிள்ளை ஓடாது. அவ்வளவுதான். அந்தளவுக்கு சினிமா மாறிடுச்சு என எல்லாருமே சொன்னார்கள். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை. இந்த மூன்று வருஷம் தயாரிப்பாளர்கள் இல்லாமல் நான் படம் பண்ணவில்லை என்று சொல்ல முடியாது. எனக்கு மனசுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்திலிருந்து விலகி விடுவேன். சில தயாரிப்பாளர்கள் வேறொரு ஹீரோயினை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் நித்யா மேனன் இருந்தால் நன்றாக இருக்கும் என உறுதியாக இருந்தேன். நிறைய அசிங்கங்களை சந்தித்தேன். ஏன் இந்த படம் பண்ணுவோம் பண்ணுவோம் என நம்ப வச்சு 7 மாதங்கள் கழுத்தை அறுத்தாங்க. ஆனாலும் நான் ஒரு நம்பிக்கையில் இருந்தேன் என பாண்டிராஜ் கூறினார். அந்த நம்பிக்கைதான் இப்போது அவரை மீண்டும் ஜொலிக்க வைத்திருக்கிறது.