விஜய் மாதிரிதான் இவரும் பிழைக்கத் தெரியாத மனுஷன்!.. பிரபல நடிகரை மேடையில் திட்டிய பேரரசு..

by Ramya |
perarasu
X

perarasu

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் விஜய். ஒரு திரைப்படத்திற்கு 200 முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார். இவரின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என்பதால் தொடர்ந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு இவரை வைத்து படம் எடுப்பதற்கு முயற்சி செய்வார்கள்.

ஆனால் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவிட்ட அறிவிப்பு பலரையும் ஆசிரியப்படுத்தியது. அதாவது நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் கடைசியாக தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்த கையோடு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருக்கின்றார்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கிய விஜய் அதனை தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து தனது கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் சிறப்பாக நடத்தி முடித்திருந்தார். தற்போது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என முழு அரசியல்வாதியாக மாறி வருகின்றார் நடிகர் விஜய். ஒவ்வொரு மேடையிலும் தனது அரசியல் பேச்சு மூலமாக மக்களிடையே பிரபலமாகி வருகின்றார்.

இவர் சினிமாவில் இருந்து விலகுவது பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். ஏன் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர்களும் நடிகர் விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று தனது கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு ஒரு நிகழ்ச்சியின் மேடையில் ஒளிப்பதிவாளர் நடராஜனை நடிகர் விஜய் உடன் ஒப்பிட்டு பேசியிருக்கின்றார். அந்த நிகழ்ச்சியின் மேடையில் அவர் பேசியிருந்ததாவது ' நட்டி நடராஜை பற்றி கூற வேண்டும் என்றால் தற்போது விஜய் சார் அரசியலுக்கு வந்திருக்கின்றார். சினிமாவை விட்டுவிட்டு, சம்பளம் மட்டும் 150 கோடி 200 கோடி என்று சொல்கிறார்கள். அதை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு அரசியலில் களமிறங்கி இருக்கின்றார்.

எப்படி விஜய் சார் அவ்ளோ பெரிய வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தாரோ? அதேபோல் தான் நட்டியும்.. அவர் கேமரா மேனாக இன்று இறங்கினார் என்றால் பல கோடி சம்பாதிக்கலாம். இன்றும் இந்தி படங்களில் அவருக்கு அவ்வளவு டிமாண்ட் இருக்கின்றது. அவர் பொழைக்கத் தெரியாத மனுஷன். கோடி கோடியாக வருது அல்லவா வாங்கி கல்லா கட்டாமல் நடிப்பு மீது அவ்வளவு ஆர்வம், நடிப்பை காதலிக்கின்றார்.





ஒரு படத்திற்கு கேமரா மேனாக 5 கோடி சம்பளம் ஒரு படத்தில் நடிப்பதற்கு 50 லட்சம் சம்பளம். பணத்திற்கு மதிப்பளிக்காமல் நடிக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு நடிகராகி இருக்கின்றார் நட்டி. இவ்வளவு ஆஃபர் இருந்தும் நடிப்பு மீது இந்த மனுஷனுக்கு எவ்வளவு ஆர்வம் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

நமக்கு எது பிடிக்குதோ, நம் மனது எது விரும்புமோ நாம் அதை செய்தால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கின்றதோ, அங்கு பணத்தையே பார்க்க கூடாது. அதுதான் வாழ்க்கை என்று கூறினார் நட்டி நடராஜன். இதை கேட்டு நான் ரொம்ப ஆச்சரியப்பட்டு போனேன். வாரிசுகள் அரசியலில் ஜெயிப்பது என்பது மிகவும் ஈசி.. ஆனால் சினிமாவில் ஜெய்ப்பது ரொம்ப கஷ்டம்' என்று கூறியிருக்கின்றார் பேரரசு

Next Story