கூத்தாடிங்கறது பெருமைப்பட வேண்டிய விஷயம்... விஜய்க்கு ஆதரவாக பட்டாசாய் வெடித்த பேரரசு

by Sankaran |   ( Updated:2024-12-15 05:54:38  )
பேரரசு, விஜய்
X

பேரரசு, விஜய் 

விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை வெற்றிகரமாகத் துவங்கி அதற்கு கொடி மற்றும் கொள்கைப் பாடலையும் போட்டுக் கலக்கி விட்டார். அதுமட்டும் காணாது என்று முதல் மாநில மாநாட்டையும் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி அசத்தி விட்டார். கூட்டத்தில் அவர் பேசிய விதம் அப்படியே படம் பார்த்தது மாதிரி சும்மா தெறிக்க விட்டதுன்னு ரசிகர்கள் உள்பட பலரும் சொன்னாங்க.

முக்கியமாக மாநாட்டில் தன் எதிரி திமுக தான் என்று போட்டு உடைத்துவிட்டார் விஜய். அதுமட்டும் அல்ல. சினிமாவுல கூத்தாடுறவன்லாம் அரசியலுக்கு வருகிறாங்கன்னு நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டு இருந்தது. அதற்கும் அந்த மாநாட்டில் தக்க பதிலடி கொடுத்து விட்டார் விஜய். அவர் சொன்னது இதுதான். கூத்தாடி குறித்து விஜய் முதல் மாநில மாநாட்டில் இப்படி பேசினார்.

சினிமாவில் இருந்து வந்திருப்பதால் தன்னை நிறைய பேர் கூத்தாடி கூத்தாடின்னு சொல்றாங்க. கூத்து என்றால் என்ன கெட்ட வார்த்தையா? கூத்து தான் இந்த மண்ணின் கலை. இதே போல் தான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போதும் சொன்னாங்க. ஆனா கூத்தாடிகள் தான் இரண்டு மாநிலங்களையும் ஆண்டாங்க. அவங்களையே கூத்தாடின்னு சொல்லும்போது நம்மைச் சொல்ல மாட்டார்களா?

திராவிடம் வளர்ந்ததே சினிமாவை வைத்து தான். கூத்தாடி என்றால் கேவலமான வார்த்தையா? சினிமாவுக்கு வந்த போது என்னை அவமானப்படுத்தினாங்க. உழைத்து உழைத்து மேலே வந்த கூத்தாடி.

தமிழர்களின் கலை, இலக்கியம், வாழ்வியல் கருவி தான் சினிமா. கூத்து சாதாரண வார்த்தை அல்ல. சத்தியத்தைப் பேசும். சாத்தியத்தைப் பேசும். கூத்து தான் அரசியல், அறிவியல்னு பல விஷயங்களையும் பேசியிருக்கு.


கூத்தாக இருந்ததுதான் இன்று சினிமாவாக மாறியிருக்கு என விஜய் பேசியது மாநாட்டில் கலந்து கொண்டவர்களை மட்டுமல்ல. அதை டிவியில் பார்த்தவர்களுக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. விஜய் படத்தில் தான் நடிப்பார். நிஜத்தில் பேசமாட்டார்னு கணக்குப் போட்டவர்களுக்கு எல்லாம் அது பேரதிர்ச்சியாகவே இருந்தது.

அந்தவகையில் விஜய்க்கு ஆதரவாக இயக்குனர் பேரரசுவும் குரல் கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

விஜயை அவன் ஒரு கூத்தாடி என்று எல்லாம் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதனால கடுப்பானார் பேரரசு. விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கியவர் இவர்.

இவர் கூத்தாடின்னு சொன்னதுக்காக என்ன பதில் தருகிறார்னு பாருங்க. ஆமாம். நாங்க கூத்தாடி தான். நாங்க அதை பெருமையாக சொல்வோம். கலைஞர் ஒரு கூத்தாடிதான். எம்ஜிஆர் ஒரு கூத்தாடிதான். அதில் எங்களுக்கு ஒன்றும் குறை இல்லை. நல்லதை நாங்க தான் சினிமாவுல சொல்றோம். அரசியல்ல இருந்து சினிமாவுக்கு வந்து நடிக்கலாம். ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாதா? இப்படி கடுமையாக சாடியுள்ளார் இயக்குனர் பேரரசு.

விஜய்க்கு ஆதரவாகக் குரல் பெருகிக் கொண்டே போவது அவருக்குள்ள பலத்தையேக் காட்டுகிறது.

Next Story