கூல்.. 96-2 படத்தில் இவங்கதான் ஜோடி.. இயக்குனரே கொடுத்த தரமான அப்டேட்

by ROHINI |
96movie
X

96movie

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதல் என்பது நிச்சயமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அது எந்த வயதில் வருகிறது எப்படி வருகிறது என யாருக்குமே தெரியாது. சிறுவயது காதல் விடலை பருவ காதல் இளமை காதல் முதுமை காதல் என எல்லா பருவத்திலும் காதல் வரத்தான் செய்யும்.

இப்படி பள்ளி பருவத்தில் மலர்ந்த காதல் கடைசி வரைக்கும் எப்படி மாறுகிறது என்னவாக போகிறது என்பதை அழகாக விளக்கிய திரைப்படம் தான் 96 திரைப்படம். பள்ளி பருவத்தில் திருஷா மீது காதல் கொண்ட விஜய் சேதுபதி கல்லூரிக்கு போகும்போதும் அதை தொடர்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு த்ரிஷாவை அவரால் நெருங்க முடியவில்லை.

ஆனால் காதல் மட்டும் அப்படியே இருக்கிறது. இன்னொரு பக்கம் த்ரிஷா வேறொருவரை திருமணம் செய்து சிங்கப்பூரில் செட்டில் ஆகி விடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு பள்ளி நண்பர்கள் அனைவரும் ரியூனியன் என்ற பெயரில் ஒன்று கூடுகிறார்கள். அதில் திரிஷாவும் வருகிறார். விஜய் சேதுபதியும் வருகிறார் .

இருவரும் ஒரு நேரத்தில் சந்திக்க இருவர் மனதிலும் இனம் புரியாத ஒரு அன்பு வெளிப்படுகிறது. பள்ளி பருவத்தில் எப்படி எல்லாம் இருந்தோம் வளர்ந்தோம் என்பது முதற்கொண்டு எல்லாவற்றையும் இருவரும் மனம் விட்டு பேசுகின்றனர். இப்படி இந்த படம் நகர அந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய இளவயது ஞாபகம் கண்டிப்பாக வந்து தான் போகும்.

படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டையும் இயக்குனர் பிரேம்குமார் வெளியிடுகிறார். எப்போது 96 படத்தின் இரண்டாம் பாகம் வரும் என இப்போது வரை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார். அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற ஒரு தகவல் வெளியானது .

ஆனால் அது முற்றிலும் பொய்யான செய்தி என இயக்குனர் பிரேம்குமாரே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் 96-2 எடுக்க முடியும். நடிகர் பிரதீப் ரெங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் 96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

96 movie

96 movie

நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்த்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன் என இயக்குனர் பிரேம் தன்னுடைய இணைய தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Next Story