விஜய் சேதுபதி கேட்ட கேள்வி!.. ஆடிப்போன இயக்குனர்!.. இப்படி யாருமே கேட்டதில்லையாம்!...
Vijay sethupathi: துபாயில் மாத சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. அந்த வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடினார். அவருக்கென சில நண்பர் கூட்டம் உருவானது சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தார்.
இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருந்தது. அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. விஜய் சேதுபதியும் ரசிகர்களிடம் பிரபலமாக துவங்கினார்.
சூது கவ்வும் போன்ற கதைகளில் துணிச்சலாக நடித்தார். வழக்கமான ஹீரோ, ஹீரோயிசம், 4 சண்டை, 4 பாட்டு என நடிக்காமல் வித்தியாசமான, இயல்பான வேடங்களில் நடிக்க துவங்கினார். இதனால்தான் ரசிகர்களுக்கு அவரை பிடித்துப்போனது. கதாபாத்திரம் பிடித்திருந்தால் போதும் என்பதுதான் விஜய் சேதுபதியின் சாய்ஸாக இருந்தது.
எனவே, வித்தியாசமான கதைகளை வைத்திருந்த உதவி இயக்குனர்கள் விஜய் சேதுபதி பக்கம் போனார்கள். இப்போது ஹீரோ, வில்லன் என கலக்கி வருகிறார். மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்களில் வில்லத்தனத்தில் அசத்தி இருந்தார். மகாராஜா படத்தில் ஒரு சிறுமியின் தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார்.
சினிமாவில் நடிக்க துவங்கியபோது ஒரிரு காட்சிகளில் வரும் வேடமென்றாலும் நடித்தார். புதுப்பேட்டை படத்தில் தனுஷின் நண்பர்களில் ஒருவராக வருவார். சசிக்குமார் நடிப்பில் உருவான சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக வருவார். இந்த படத்தில் 96 பட இயக்குனர் பிரேம் உதவி இயக்குனராக இருந்தார்.
சமீபத்தில், ஊடகமொன்றில் பேசிய பிரேம் ‘சுந்தர பாண்டியன் படப்பிடிப்பில் ஒரு நாள் இயக்குனரிடம் விஜய் சேதுபதி ஏதோ கேட்டார். உடனே, பிரபாகரன் என்னிடம் வந்தார். ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது என நினைத்தேன். ‘இவர எங்கயா புடிச்சீங்க?’ எனக்கேட்டார். ‘என்னாச்சி?’ என்றேன். நான் காட்சி இதுதான் சொன்னதும் ‘அது என்ன மூட்’ என கேட்கிறார். இதுவரை என்னிடம் யாரும் அதை கேட்டதே இல்லை’ என உற்சாகமாகிவிட்டார். அந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்’ என பிரேம் கூறினார்.