நயனை தொடர்ந்து.. சினிமா விமர்சகர்களை தாக்கிய மற்றொரு பிரபலம்.. ரவுண்ட் கட்டி அடிக்கிறாங்களே!..
தமிழ் சினிமாவில் விமர்சனம் என்கின்ற பெயரில் கருத்துக்களை தெரிவித்து வரும் விமர்சகர்களுக்கு தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், விமர்சனங்கள் குறித்து பேசி இருந்தார்.
மேலும் தனுஷ் உடன் இருந்த பிரச்சனை குறித்தும் அவர் விரிவாக கூறியிருந்தார். இந்த பேட்டியின் நடுவே பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு டீமை தாக்கி பேசியிருந்தார். அவர்கள் போடும் 50 வீடியோகளில் 45 வீடியோக்கள் தன்னை பற்றி மட்டும் பேசுவதாகவும், தன்னை பற்றி பேசுவதால் தான் அவர்களுக்கு நிறைய வியூஸ்கள் வருவதால் இது போன்று தவறான கருத்துக்களை பகிர்ந்து சம்பாதித்து வருகிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல் மூன்று குரங்குகள் என்று பாடி ஷேமிங் செய்வது போன்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து வலைப்பேச்சு யூடியூப் சேனல் இந்த கருத்துக்கு புள்ளிவிவரத்துடன் பதிலளித்திருந்தார்கள். அதை தொடர்ந்து பல்வேறு youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் அந்தணன், பிஸ்மி நயன்தாராவை தொடர்ந்து விமர்சனம் செய்து கிழித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 96 என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம்குமார் சமீபத்திய பேட்டியில் சினிமா விமர்சனங்கள் குறித்து ஒரு கருத்தை முன் வைத்திருக்கின்றார். 96 என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் இயக்குனர் பிரேம்குமார். இதனை தொடர்ந்து கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோரை வைத்து மெய்யழகன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரேம்குமார் கூறியிருந்ததாவது ' 96 திரைப்படத்தில் நான் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி இருந்தேன். அதற்கு முறையாக ரைட்ஸ் வாங்கவில்லை என்று பேசினார்கள். உடனே அவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு யார் சொன்னது எனக் கேட்டேன்.
ஏனென்றால் இது போன்ற தகவல்களை ஒன்று இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர் கூறி இருக்க வேண்டும். இதனால் யார் சொன்னது என்று கேட்டவுடன் சார் சார் என்று சொல்லி சமாளித்தார்கள். நாங்கள் ரைட்ஸ் வாங்கி இருக்கின்றோம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவர்கள் நெகட்டிவாக பேச வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அதாவது நாங்கள் அவர்களுடன் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும் வரை அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
நாங்கள் என்ன செய்ய முடியும் அவர்களைப் போல யூடியூப் சேனலாக வைத்திருக்கின்றோம். உடனடியாக அவர்கள் கூறும் கருத்துக்கு யூடியூப் சேனலில் அமர்ந்து கொண்டு பதில் அளிப்பதற்கு.. இப்படித்தான் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று பொத்தாம் பொதுவாக கூறி இருக்கின்றார். ஆனால் அவர் வலைப்பேச்சு டீமை தான் கூறுகிறார் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.