1. Home
  2. Cinema News

Vijay TVK: மக்களுக்கு நல்லது செய்யணும்னு அரசியலுக்கு வரல! விஜயின் நோக்கமே இதான்.. எல்லா பக்கமும் செக்கா?

Vijay TVK: மக்களுக்கு நல்லது செய்யணும்னு அரசியலுக்கு வரல! விஜயின் நோக்கமே இதான்.. எல்லா பக்கமும் செக்கா?

Vijay TVK:

தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க உலகமே காத்துக் கொண்டிருக்கின்றது. சீனா வரை இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல உலக அரசியல் தலைவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட இறந்த குடும்பங்களுக்கு அவர்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு:

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் தன்னுடைய கட்சி சார்பாக நடத்தப்பட்ட தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசலால் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் திமுகவின் சதி இருப்பதாக தவெக சார்பில் கூறிவருகின்றனர். இதுசம்பந்தமான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

வெள்ளிக்கிழமை இதன் நிலவரம் என்ன என்பது தெரியவரும். கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இரண்டு பேரை போலிசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை தனிப்படை அமைத்து பிடிக்கும் பணியில் போலிஸார் விரைந்துள்ளனர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் முன் ஜாமின் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

அடுத்தடுத்து விசாரணை:

கூடிய சீக்கிரம் இன்னும் விஜயை ஏன் கைது செய்யவில்லை என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தனிப்படைஅமைத்து விசாரணை செய்யவும் டெல்லியில் இருந்து 8 பேர் கொண்ட குழு கரூருக்கு விஜயம் செய்தனர். அவர்களும் கரூரில் நேரடியாக மக்களை சந்தித்து உண்மை நிலவரத்தை ஆராய்ந்தனர்.

10000 பேர்தான் கூடுவார்கள் என்று அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததே ஏற்கமுடியாதது? அதெப்படி உங்களால் அதை கூற முடிந்தது என கரூர் நீதிமன்றம் தவெக கட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரு டாப் ஸ்டார் வருகிறார் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பார்க்க வருவார்கள். அதிலும் விஜய் மிகவும் காலதாமதமாகத்தான் வந்தார். அதனால் காலையில் இருந்து மாலை வரை சாப்பிடாமல் வெயிலேயே மக்கள் அந்த கூட்ட நெரிசலில் தவித்திருக்கின்றனர்.

அரசை விட அதிகமாக செய்யலாமே?

இந்த நிலையில் விஜயை பற்றி பிரபல திரைப்பட இயக்குனர் ராஜகுமாரன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்திருப்பதாக கூறினார். ஆனால் அது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் வாங்குகிற 200 கோடியில் அரசை விட அதிகமாக செய்யலாமே. வருடத்திற்கு இரண்டு படம் நடித்து 400 கோடியில் 100 கோடியை தனக்காக வைத்துக் கொண்டு மீதம் 300கோடியில் எவ்வளவோ நல்லது செய்யலாமே?

Vijay TVK: மக்களுக்கு நல்லது செய்யணும்னு அரசியலுக்கு வரல! விஜயின் நோக்கமே இதான்.. எல்லா பக்கமும் செக்கா?
rajakumaran

ஆனால் அது அவருடைய நோக்கம் இல்லை. சினிமாவை அவர்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதை போல நாட்டையும் நாம்தான் ஆட்சி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அது நடக்காது என ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.