பால் டப்பா சில் புரோ!.. ‘மக்காமிஷி’ பாடல் எழுதியவருக்கு வருத்தம் தெரிவித்த ராஜேஷ்!...
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் ஜாலியாக படமெடுப்பவர் இயக்குனர் ராஜேஷ். இவர் படமென்றால் படத்தின் ஹீரோ டாஸ்மாக்கில் தனது நண்பருடன் சரக்கடிக்கும் காட்சி கண்டிப்பாக இருக்கும். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் சிவா மனசுல சக்தி.
இந்த படத்தில் ஜீவாவும், சந்தானமும் சேர்ந்து அடித்த லூட்டி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படம் காட்சிக்கு காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்தது. காதல் கதையில் ஜாலியான காட்சிகளை வைத்து சுவாரஸ்யமாக கதை அமைத்திருந்தார் ராஜேஷ். அந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து அடுத்து ஆர்யாவை வைத்து பாஸ் என்கிற பாஷ்கரன் படத்தை இயக்கினார்.
இந்த படத்திலும் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. உதயநிதியை வைத்து ஒரு கல் ஒரு கண்னாடி படத்தை இயக்கினார். இந்த படமும் ஹிட் அடித்தது. ஆனால், அதன்பின் ராஜேஷ் இயக்கிய சில படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை.
இப்போது ஜெயம் ரவி - பிரியங்கா மோகன் ஆகியோரை வைத்து பிரதர் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற மக்காமிஷி பாடல் யுடியூப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஜேஷ் ‘மக்காமிஷி பாடலை அனீஷ் என்கிற பையன் எழுதி இருந்தான். அவனை பால் டப்பா என்றுதான் கூப்பிட சொல்வான். விழாவுக்கு கூப்பிட்டேன். ஆனால், அவனோ அதான் பாட்டு ஹிட் ஆயிடுச்சில்ல புரோ நான் எதுக்கு என்றான். நீ வாடா. இந்த படத்துல பாட்டு எழுதுன எல்லாம் வருவாங்க என்றேன்.
அதான் அவங்க வராங்க இல்ல.. நான் எதுக்கு என்றான். ஒருவழியாக வந்து எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு போய்விட்டான். மேடைக்கும் வரவில்லை’ என ஜாலியாக பேசியிருந்தார். இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராஜேஷ் ‘நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. மக்காமிஷி பாடலை எழுதிய அனீஷை மட்டம் தட்ட வேண்டும் என்பது என் நோக்கமில்லை. பலருக்கும் மேடை கிடைப்பதில்லை. அதனால்தான் ஜாலியாக பேசினேன். விரைவில் அனீஷை சந்திப்பேன்’ என சொல்லி இருக்கிறார்