அமரன் படத்திற்கு வந்த சிக்கல்!.. விஜய்க்கு நடந்தது இப்ப எஸ்.கே-வுக்கும் நடந்து போச்சே!..

by Ramya |
vijay
X

vijay

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் தமிழில் தனது முதல் படத்தை தளபதி 69 படம் மூலமாக தயாரிக்கின்றது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த வருடம் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளியாக வாய்ப்பு இருக்கின்றது. இதை தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதம் ஒட்டுமொத்த படபிடிப்பையும் முடித்துவிட்டு அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அரசியல் பிரவேசம்:

இதற்கு இடையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். தளபதி 69 திரைப்படத்தை முடித்த சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்தருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜீவ் மேனன் ஒரு செய்தியை பகிர்ந்து இருக்கின்றார்.


அதாவது கடந்த தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அதே சமயம் இந்த திரைப்படத்தில் ஒரு பிரச்சனையும் ஏற்பட்டது. அதாவது அதில் ஒரு செல்போன் நம்பர் பயன்படுத்தப்பட்டது.

அந்த நம்பர் உண்மையான ஒரு இளைஞனின் நம்பர் என்பதால் அதற்கு தொடர்ந்து போன் செய்து பலரும் டார்ச்சர் செய்து வந்ததன் காரணமாக அவர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இதே பிரச்சனை நடிகர் விஜய்க்கு வந்ததாக தெரிவித்து இருக்கின்றார் ராஜீவ் மேனன். கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குளிர்பான விளம்பர படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார்.

அந்த விளம்பரத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். அந்த விளம்பரத்தில் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் சாய் பல்லவி ஒரு போன் நம்பர் கொடுத்தது போன்று விஜய்யும் ஒரு பெண்ணிடம் ஃபோன் நம்பர் கொடுப்பார். அந்த நம்பர் தன்னுடையது என்று கூறிய ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அமரன் படத்திற்கு எப்படி செல்போன் நம்பரால் ஒரு பிரச்சினை வந்ததோ? அதேபோன்று விஜய் நடித்த விளம்பரத்திற்கும் இது போன்ற பிரச்சனை வந்தது என்று தெரிவித்து இருக்கின்றார் ராஜீவ் மேனன்.


விடுதலை திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்த அசத்தியிருந்தார் இயக்குனர் ராஜீவ் மேனன். இவர் தமிழில் மின்சார கண்ணா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். தமிழில் ஏராளமான விளம்பர திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயின் விளம்பரபடத்திற்கு நடந்த விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

Next Story