அந்த படத்த விட சூப்பரா? அப்போ ‘பைசன்’ சூப்பர் ஹிட்தான்.. படத்த பார்த்த ராம் கொடுத்த ரிவியூவ்

bison
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் பைசன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷனில் பட குழு தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது .இது கபடி விளையாட்டை மையமாக கொண்ட ஒரு கதைக்களம் என கூறப்படுகிறது .அதுமட்டுமல்ல ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தைரியம் துணிச்சல் ஆகியவற்றை விளக்கும் திரைப்படமாகவும் இது இருக்கும் என தெரிகிறது .படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இவர்களுடன் அழகம் பெருமாள், பசுபதி, லால் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டெர்டெயின்மென்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். படப்பிடிப்பு முழுவதும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கின்றது. அதனால் இந்த படம் துருவ் விக்ரமுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் ராம் இந்த படத்தை பற்றி அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். மாரி செல்வராஜை பொறுத்த வரைக்கும் ராம் உதவியாளராக இருந்து தனியாக வந்தவர் தான் மாரிசெல்வராஜ்.
ராமுடைய சிஷ்யன் தான் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜிடம் பேசும் பொழுது முதலில் வணிக ரீதியான வெற்றியாக தான் உன்னுடைய படம் இருக்க வேண்டும் என்று கூறியதாக சொன்னாராம். அது மட்டுமல்ல பெரிய ஹீரோக்களுடனும் படம் பண்ண வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறார் ராம். நான் பண்ணும் படம் மாதிரி தான் அவர்களுடைய படமும் இருக்கும். எப்படி பறந்து போ திரைப்படமோ அதைப்போல தான் பைசன் திரைப்படமும். இவர்களுடைய வெற்றி என்பது எங்களுடைய மொத்த வெற்றி. அப்படி தான் நாங்கள் பார்க்கிறோம் .
ஆனால் அந்த வெற்றி போதாது என்றுதான் நான் கருதுகிறேன் .ஏனெனில் அவனிடம் என்ன கதைகள் இருக்கிறது என எனக்கு தெரியும். ஒரு பேன் இந்திய இயக்குனராக மாறுவதற்குரிய எல்லா தகுதிகளும் அவனிடம் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து பாரதிராஜாவுக்கு பிறகு ரொம்ப வேகமாக படம் எடுக்கக்கூடிய ஒரு இயக்குனர் மாரி செல்வராஜ். குறைந்த காலத்தில் வேகமாக படம் எடுப்பதில் பாரதிராஜா மட்டும்தான் முதன்மையானவராக இருந்தார். அவருக்கு பிறகு இப்போது மாரி செல்வராஜை தான் நான் பார்க்கிறேன். படத்துக்கு படம் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.

vazhai
அவர் எடுத்த வாழை திரைப்படங்களை பார்க்கும் பொழுது பிலிம் மேக்கிங்கில் அந்த படம் எனக்கு பிடித்தது .பைசன் திரைப்படத்தை பார்த்து விட்டேன். அது வாழை திரைப்படத்தை விட சூப்பராக இருக்கிறது .பிலிம் மேக்கிங் ஆக கன்டென்ட் ஆக அவர் எடுத்த விதம் பிரமாதமாக இருக்கிறது. இன்னும் அவனுடைய வளர்ச்சியை நான் பார்க்க வேண்டும் .இன்னும் அவன் மேலே போக வேண்டும் .ஹிந்தி படங்களையும் எடுக்க வேண்டும் .ஷாருக்கான் மற்றும் அமீர்க்கானை வைத்து படம் எடுத்து ஷாருக்கான் செட்டில் நான் போய் ஷாருக்கானுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். ஏனெனில் ஷாருக்கான் உடைய ஒரு தீவிரமான ரசிகர் தான் நான் .எந்தெந்த நடிகர்களுடன் எல்லாம் போட்டோ எடுக்க வேண்டும் எனக் கூறுகிறேனோ அவர்களை வைத்து எல்லாம் மாரி செல்வராஜ் படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என ராம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.