கேம் சேஞ்சர் தோல்விக்கு இதுதான் காரணம்.. இவ்வளவு ஓபனா சொல்லிட்டாரே அந்த இயக்குனர்..!
Game Changer: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்கின்ற பெயருடன் வலம் வருபவர் இயக்குனர் சங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி இவர் இயக்கிய பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கின்றது. ஆனால் கடைசியாக தமிழில் இவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
படம் வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பிடம் மனம் தளராத சங்கர் அடுத்ததாக நடிகர் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் இந்த திரைப்படமும் வெளியாகி அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக அமைந்தது.
நேரடி தெலுங்கு திரைப்படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.
இந்தியன் 2 திரைப்படத்தையே கேம் சேஞ்சர் திரைப்படம் மிஞ்சி விட்டது என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இதனால் வசூல் ரீதியாகவும் படம் தோல்வியை சந்தித்தது. மேலும் இயக்குனர் சங்கர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தில் பிரம்மாண்டம் மட்டும்தான் இருக்கின்றது. கதை பெரிதாக இல்லை என்கின்ற விமர்சனங்களை முன் வைத்தார்கள்.
மேலும் பல இடங்களில் லாஜிக் சுத்தமாகவே இல்லை என்று கூறி வந்தார்கள். பிரம்மாண்டத்தை வைத்து மட்டுமே ஒரு படம் வெற்றி படமாக மாறாது என்கின்ற கருத்துகள் ரசிகர்களிடையே அதிக அளவு எழுந்து வந்த காரணத்தால் கேம் சேஞ்சர் திரைப்படம் ஒரு தோல்வி படமாக மாறி இருக்கின்றது. இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் தோல்வி படமாக மாறியதற்கு என்ன காரணம் என்பதை பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா கூறியிருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'ஷங்கரின் படங்கள் என்றாலே அதில் பிரம்மாண்டம் அதிக அளவில் இருக்கும். அதே சமயம் சிறப்பான ஐடியாவும் படத்தில் இருக்கும். எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால் முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வர் என்கின்ற கான்செப்ட்டை கொண்டு வந்திருப்பார்.
அதனைத் தொடர்ந்து எந்திரன் திரைப்படத்தில் ஒரு ரோபோவுக்கும் காதல் மலரும் என்கின்ற ஐடியாவை வைத்து படத்தை இயக்கியிருப்பார். இந்த ஐடியா அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் அதுபோன்ற எந்த ஒரு சிறப்பான ஐடியாவும் இல்லை. அதன் காரணமாகத்தான் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்று கூறியிருக்கின்றார். இந்த கருத்தை சில ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.மேலும் சிலர் இந்த கருத்துக்கு மறுப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
காரணம் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதையும் ஐடியாவும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை படமாக எடுத்தது தான் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது என்று கூறி வருகிறார்கள். இருப்பினும் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருப்பது சங்கருக்கு மேலும் சருக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்போது அவர் இந்தியன் 3 திரைப்படத்தை எடுப்பதற்கு தயாராகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.