தனுஷூடன் படம் பண்ணாததுக்கு பொல்லாதவன்தான் காரணமா? இயக்குனர் ராம் சொன்ன தகவல்

பறந்து போ படம் இயக்குனர் ராமின் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ராம். இவர் தனுஷ் உடன் ஏன் இணைந்து பணிபுரியவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் சித்ராலட்சுமணன் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
பெரிய பெரிய நடிகர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதை நான் தான் தவற விட்டேன். நமக்கு அது எப்படி அமையணும். அதை எப்படி எல்லாம் அணுகணும்னு தெரியாம இருந்தது. அந்த சமயத்துல என்ன பேசணும். என்ன பண்ணிருக்கணும்னு கூட தெரியல. ப்ராங்கா இருந்ததனால அந்தப் படம் பண்ண விரும்புறாங்கன்னு கூட தெரியாம இருந்தது. வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு கட்டத்துல ஒவ்வொரு படமும் பண்ண வேண்டியதா இருந்தது.
சதாம் உசேன் படம் தனுஷ் உடன் பண்றதா இருந்தது. ஆனா அந்த டைம் தனுஷ_க்கு பொல்லாதவன் படம் வந்து இருந்தது. அந்தப் படம் வந்தபோது அவரும் இன்னைக்கு இருக்குற மாதிரி உயர்ந்த நட்சத்திர அந்தஸ்துல உள்ளவரு இல்லை. அதை நோக்கிப் போய்க் கொண்டு இருந்தார். நான் கற்றது தமிழ் டைரக்டர்னு சொல்லி அவரு முன்னாடி போய் என்னால நிக்க முடியல. அந்த புராஜெக்ட் அப்படியே போயிடுச்சு என்று கேஷூவலாகச் சொல்கிறார் இயக்குனர் ராம்.
கற்றது தமிழ் படத்தைத் தொடர்ந்து சதாம் உசேன் படத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்தாராம் இயக்குனர் ராம். 2வது படத்திற்கே தனுஷிடம் போய்க் கேட்பதா என்று நினைத்து அந்த திட்டம் இறுதியில் கைவிடப்பட்டதாம். அந்த நேரம் தங்க மீன்கள் படத்தை இயக்கத் தொடங்கி விட்டார்.

2007ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் பொல்லாதவன். ஜோடியாக ரம்யா நடித்தார். டேனியல் பாலாஜி, கிஷோர், முரளி, பானுப்ரியா, சந்தானம், கருணாஸ், சேத்தன், சென்ட்ராயன், அஞ்சு, மனோபாலா, பூனம் பஜ்வா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆக்ஷன் படங்களின் வரிசையில் தனுஷூக்கு இது ஒரு மைல் கல்லாக அமைந்தது. மாமனார் ரஜினி படத்தின் தலைப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வரவேற்பைப் பெற்றது. படிச்சிப் பார்த்தேன் ஏறவில்லை என்ற பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது.