குஷியில் அதை இதுவரைக்கும் யாரும் கண்டுபிடிக்கல.. ஆட்டைய போட்ட மேட்டரை அவுத்து விட்ட எஸ் ஜே சூர்யா..
குஷி ரீ-ரிலீஸ் :
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது இந்த ட்ரெண்டை ஒவ்வோரு இயக்குனர்களும் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி கடந்த மாதம் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் கலெக்ஷனை அள்ளியது.
இந்நிலையில் விஜயின் குஷி திரைப்படம் வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு குஷி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு தேவா இசை அமைதிப்பார். மேலும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருப்பார். படம் வெளியாகி தற்போது வரை 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ரீ-ரிலீஸ்-ல் கலக்கிய கில்லி :
ஏற்கனவே விஜயின் கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 40 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது. தயாரிப்பாளருக்கு அந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் மீண்டும் குஷி படத்தை மறு வெளியீடு செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். அதற்கான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. விஜயின் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதால் தற்போது வெளியாக இருக்கும் குஷி திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
இந்த வருடம் விஜய்யின் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இந்த மாதிரியான ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆதரவாளராக இருக்கும். இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் குஷி படத்தில் மிகவும் ஹிட்டான ’கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் எங்கிருந்து சுடப்பட்டது என்ற அரிய தகவலை பகிர்ந்துள்ளார்.
பாடல் சுட்ட கதை :
அதில், “situation-னை தேவா சாரிடம் கூறினேன். ’செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாய்’ இந்தப் பாடல் போல நம்ம படத்தில் பாட்டு வரணும் சார். அப்படின்னு சொன்னேன். அதற்கு அவர் எவ்வளவோ பாட்டு இருக்கும்போது இந்த பாட்டு தான் வேணுமா? அப்படின்னு கேட்டாரு. ஆமான்னு சொன்னேன். அப்படி வந்ததுதான் ’கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல்”.
”படம் வெளியாகி 24 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் யாரும் கண்டுபிடிக்கவே இல்லை. ரெண்டு பாட்டும் ஒரே மாதிரியாக இருக்கும்’. என்று பல நாள் புதைக்கப்பட்டிருந்த ரகசியத்தை வெளியில் சொன்னார்.
இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் என்றால் அதில் சில copy cut இருக்கத்தான் செய்யும். ஆனா இந்த பாடலை உல்டா தட்டி அடித்து இதுவரை யாருமே கண்டுபிடிக்காத வகையில் தேவாவும், எஸ்.ஜே.சூர்யாவும் செய்திருக்கிறார்கள் என்பது அரிய தகவலாக இருக்கிறது.
