மனைவியை பிரியும் சீனு ராமசாமி!.. சினிமாவில் அடுத்த விவாகரத்து!. இதுக்கே எண்டே இல்லையா!...
பாலுமகேந்திரா சீடர்:
Seenu Ramasamy: திரையுலகத்தில் விவகாரத்து என்பது இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏற்கனவே கமல் - சரிகா, பார்த்திபன் - சீதா என பல சீனியர்கள் இருக்கிறார்கள். அதன்பின் தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி என பலரும் தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்கள்.
அதேபோல், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரின் மனைவி அறிவித்தார். இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமியும் இப்போது தனது மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி அறிமுகம்:
இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் சீனுராமசாமி. மனித உறவுகளின் மேன்மையை தனது திரைப்படங்களில் அழகாக காட்டுபவர். இவர் இவர் இயக்கிய முதல் திரைப்படம் கூடல் நகர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதியை முதன் முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தவர் இவர்தான்.
அப்படி வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்த சரணாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன்பின் நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்னே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்னை செல்லதுரை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
பாலியல் புகார்:
சில மாதங்களுக்கு முன்பு திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்த மனிஷா யாதவ சீனு ராமசாமி மீது பாலியல் புகாரும் சொன்னார். சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடித்தபோது தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், அந்த புகாரை சீனு ராமசாமி மறுத்தார். இந்நிலையில்தான், இப்போது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். தனது மனைவி தர்ஷனா உடனான 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடை பெறுவதாகவும், இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவரவர் வழியில் பயணிக்க போவதாகவும் கூறியிருக்கிறார். அதோடு, எனது மனைவியின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது. இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்’ எனவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.