தயாரிப்பாளர்களுக்கு காசு போனா எனக்கென்ன!.. அடங்காத ஷங்கர்... வேள்பாரி டேக் ஆப் ஆகுமா?..

by Murugan |
தயாரிப்பாளர்களுக்கு காசு போனா எனக்கென்ன!.. அடங்காத ஷங்கர்... வேள்பாரி டேக் ஆப் ஆகுமா?..
X

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு கடந்த பல வருடங்களாக ஹிட் படங்கள் அமையவில்லை. சியான் விக்ரமை வைத்து இயக்கிய ஐ, கமலை வைத்து இயக்கிய இந்தியன் 2, ராமசரணை வைத்து இயக்கிய கேம் சேஞ்சர் போன்ற படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லை. இந்தியன் 2 படத்தில் அவர் சொன்ன அட்வைஸ் எல்லாம் 2கே கிட்ஸ்களுக்கு கிரின்ச்-ஆக தெரிந்தது.

ஷங்கரின் பழைய ஃபார்முலா காலாவதியானதையே இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வி காட்டியது. ஷங்கர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டினார்கள். அதிலும் கேம் சேஞ்சர் படம் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டத்தை கொடுத்தது.

இந்த படங்களின் தோல்வியால் ஷங்கருக்கு இனிமேல் தயாரிப்பாளரே கிடைக்கமாட்டார் என பலரும் பேசினார்கள். இந்நிலையில்தான் வேள்பாரி நாவலை 3 பாகங்களாக எடுக்கப்போவாதாக ஷங்கர் கூறினார். இந்த நாவல் தொடர்பான விழாவில் ரஜினியும் கலந்து கொண்டு பேசினார். ஒருபக்கம் இந்தியன் 3-ஐ முடிக்க லைகா நிறுவனத்துக்காக ரஜினி ஷங்கரிடம் தூது போனதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், வேள்பாரியில் ரஜினி, கமலை நடிக்க வைக்க ஷங்கர் ஆசைப்படுகிறாராம். அதோடு படத்தின் பட்ஜெட் 1000 கோடியை தொடும் என்பதால் வெளிநாட்டில் யாராவது தயாரிப்பாளர் கிடைப்பாரா என வலைவீசி வருகிறாராம். இது நடக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Next Story