புஷ்பா 3-க்கு முன் அந்த ஹீரோவுடன் ஒரு படம்!.. பக்காவா ஸ்கெட்ச் போட்ட சுகுமார்!…

தெலுங்கு சினிமாவில் ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானவர் சுகுமார். ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய கதை இது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் கன்னடம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது.
அதன்பின் புஷ்பா 2 படத்தை இயக்கினார் சுகுமார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவே இந்த பாகத்திலும் அல்லது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் 1800 கோடி உரை வசூல் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது.
தெலுங்கில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் என்கிற சாதனையை புஷ்பா 2 பெற்றிருக்கிறது. ஏற்கனவே ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுதான் பெரிய சாதனையாக இருந்தது. ஆனால் அந்த வசூலை புஷ்பா 2 முறியடித்தது.
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 10 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் சுகுமார் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்கிற என்பது செய்தி இதுவரை வெளியாகவில்லை. மீண்டும் அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா 3 அவர் எடுப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது உண்மைதான் என்றாலும் அந்த படத்திற்கு முன் பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம் சுகுமார். இந்த படத்தை தெலுங்கில் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவரும், தமிழில் விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்தவருமான தில் ராஜு தயாரிக்கவிருக்கிறார்.
புஷ்பா பட வேலைகள் 2017ம் வருடம் துவங்கும் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், அல்லு அர்ஜூன் அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.