மீண்டும் தனது கனவு படத்தை தூசிதட்டி எடுக்கும் சுந்தர் சி.. அட அந்த பெரிய பட்ஜெட் படமா?..
Director Sundar C: தமிழ் சினிமாவில் தொடர்ந்து 30 வருடங்களாக கமர்சியல் திரைப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக இருந்து வருகின்றார் இயக்குனர் சுந்தர் சி. இந்த ஆண்டு பொங்கலுக்கு இவரது இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட மதகஜராஜா திரைப்படம் வெளியாகி சக்க போடு போட்டு வருகின்றது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான கேம் சேஞ்சர், வணங்கான், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா என பல திரைப்படங்கள் வெளியான போதிலும் மதகஜராஜா திரைப்படம் தான் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தது. 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்பதை பலரும் எதிர்பார்க்காத இருந்தது.
எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் சுந்தர் சி யின் கமர்சியல் திரைப்படம் என்றாலே அதற்கு ஒரு தனி மவுசு உண்டு. அதனை இந்த திரைப்படம் நிரூபித்து இருக்கின்றது. தொடர்ந்து கமர்சியல் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் சுந்தர் சி முதன்முறையாக சரித்திர படம் ஒன்று இயக்குவதற்கு ஆசைப்பட்டார். இப்படத்திற்கு சங்கமித்ரா என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.
சுந்தர் சி யின் கனவு திரைப்படமாக இப்படம் தயாராகி வந்தது. பொருளாதாரப் பிரச்சினை காரணமாக திடீரென இப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன், ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. வரலாற்று கதைகளத்தை மையமாக வைத்து படத்தை இயக்குவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தார் சுந்தர் சி.
இந்த திரைப்படத்திற்கு இசைபுயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருந்தார். கடந்த 2018 தொடங்கப்பட்ட இப்படம் திடீரென்று பணப்பிரச்சனை காரணமாக தேனாண்டாள் பிலிம் நிறுவனம் படப்பிடிப்பை தொடங்காமல் நிறுத்தி வைத்துவிட்டது. இந்த திரைப்படத்தை 250 கோடி பட்ஜெட்டில் எடுப்பதற்கு இயக்குனர் சுந்தர் சி முடிவு செய்திருந்தார். படம் ட்ராப்பாகி இருந்தாலும் மீண்டும் இப்படத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கின்றது. சுந்தர் சி யின் கனவு திரைப்படமான சங்கமித்ரா திரைப்படத்தில் ஏற்கனவே கமிட்டான நடிகர்கள் நடிக்க இருக்கிறார்களா? அல்லது திரைப்படத்தை வேறு நடிகர்களை வைத்து பிரஷ்ஷாக இயக்கப் போகின்றாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயம் இந்த திரைப்படம் சுந்தர் சியின் கமர்சியல் திரைப்படங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.