முரளிக்கு அந்த வீக்னஸ் அதிகமாம்...! இல்லன்னா விஜயகாந்த் மாதிரி வந்துருப்பாராம்..!

2002ல் முரளி, மீனா இணைந்து நடித்த படம் நம்ம வீட்டு கல்யாணம். வி.சேகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், வடிவேலு, விவேக், மனோரமா, ஆர்.சுந்தரராஜன், பாண்டு, மதன்பாப், குமரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் இயக்குனர் வி.சேகர் முரளியைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க.
முரளி நல்ல நடிகன். அவங்க அப்பா பெரிய டைரக்டர். நல்ல நடிகனா வந்துருக்க வேண்டியது. விஜயகாந்த் இடத்தை அவன்தான் பிடிக்கிற அளவுக்கு ரொம்ப நல்லாருந்தது. இடையில சில குழப்பம். கால்ஷீட் ஒழுங்கா கொடுக்காம பண்ணினான். எங்கிட்டேயும் அந்த வேலை பண்ணிருக்கான்.
எந்தப் பழக்கமா இருந்தாலும் வெளியே வச்சிக்க. தொழில்ல வச்சிக்கிட்டா படம் பண்றவன் பாதிச்சிடுவான். டிரிங்ஸ், லேடீஸ் பழக்கம். இருக்கலாம். அதெல்லாம் வெளியில எங்காவது வச்சிக்கணும். இங்கே என்ன தொழில்ல வச்சிக்கக்கூடாதுல்ல. கார் ஓட்டுனா ஓட்டும்போது தண்ணி அடிப்பியா? கார்ல தூங்குறவன் எல்லாம் காலியா ஆகிடுவான். அப்படி இடம் பொருள்னு அவன்கிட்ட இல்லை.
நீங்க அட்வைஸ் பண்ணுனீங்களான்னு ஆங்கர் கேட்க, சூப்பர்குட் பிலிம்ஸ் சௌத்ரியே அட்வைஸ் பண்ணிக் கேட்கலன்னா நாம சொல்லி என்ன கேட்கப்போறான்? சௌத்ரி எல்லாரும் கழட்டி விட ஆரம்பிச்சதும் மார்க்கெட் கம்மியா ஆகிடுச்சு என்கிறார் இயக்குனர் வி.சேகர்.

முரளி இறக்கும்போது அவருக்கு வயது 55தான். இதயம் படத்தில் வரும்போது ரசிகர்களின் இதயங்களை எல்லாம் கொள்ளை அடித்தது இதே முரளிதான். மென்மையான கதாநாயகன் என்ற அடையாளத்துடன் சினிமா உலகிற்குள் வந்து தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டார்.
இவரது நடிப்பில் அதர்மம் ஒரு ஆக்ஷன் படம். வெற்றிக்கொடி கட்டு ஒரு கமர்ஷியல் படம். நம்ம வீட்டுக் கல்யாணம் ஒரு காதல் படம். காலமெல்லாம் காதல் வாழ்க ஒரு சூப்பர்ஹிட் லவ் ஸ்டோரி. சமுத்திரம், ஆனந்தம், சுந்தரா டிராவல்ஸ் படங்கள் வெற்றி முரசு கொட்டியவை.