புது பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணும் வெங்கட்பிரபு!.. சினிமா இல்லன்னாலும் இது கை கொடுக்கும்!..

Venkat Prabu: இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. துவக்கத்தில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார். தனது நண்பர் கூட்டத்தை வைத்தே இந்த படத்தை இயக்கினார்.
ஷூட்டிங் முடிந்துவிட்டால் வெங்கட்பிரபு நண்பர்களுடன் ஜாலியாக சரக்கடிப்பார் என சொல்வார்கள். சென்னை 28 படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கூட அடிக்கடி மது அருந்துவது போல காட்சிகள் இருக்கும். அடுத்து இயக்கிய சரோஜா, கோவா போன்ற படங்களிலும் இப்படி காட்சிகள் இருக்கும். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பப்களுக்கும் வெங்கட்பிரபு தனது நண்பர்களும் செல்வது வழக்கம்.
வெங்கட்பிரபு பார்ட்டி குரூப்பில் முக்கியமாக பிரேம்ஜி இருப்பார். பிரேம்ஜியும், நடிகர் ஜெய்யும் ஃபுல் போதையில் காருக்குள் மட்டையாகி கிடந்த சம்பவமெல்லாம் நடந்தது. அஜித்தை வைத்து மங்காத்தா படம் இயக்கிய வெங்கட்பிரபு அந்த படத்தில் அஜித் உள்ளிட்ட பலர் சரக்கடிப்பது போல காட்சிகளை வைத்திருந்தார்.
அந்த படத்திற்கு பின் வெங்கட் பிரபுவுக்கு ஹிட் படமே அமையவில்லை. அவர் இயக்கிய எல்லா படங்களுமே தோல்விதான். ஒருவழியாக விஜயை வைத்து கோட் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவதாக பேசப்பட்டது. பல இழுபறிகளுக்கு பின் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இப்போதெல்லாம் வெங்கட்பிரபு அடிக்கடி இலங்கை செல்கிறார். அங்கும் அவருக்கு நட்பு வட்டாரம் இருப்பதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் பட கதை விஷயமாக அங்கேயுள்ள ஒரு ரெஸ்டோ பாரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அந்த பாரின் ஓனர் பாரை விற்கும் முடிவில் இருப்பதை தெரிந்து ‘நானே வாங்கிக்கொள்கிறேன்’ என வெங்கட் பிரபு சொல்லிவிட்டாராம்.
வெளிநாட்டில் முதலீடு செய்ய விரும்பினால் அங்குள்ள ஒருவரை பார்ட்னராக சேர்த்துகொள்ள வேண்டும் என்பது விதிமுறை. எனவே, அப்படி ஒருவரை தேடி வருகிறாராம் வெங்கட்பிரபு. ஒருபக்கம், அவருக்கு மிகவும் நெருக்கமானவரும் கலை இயக்குனருமான ராஜீவனை வைத்து ரெஸ்டோ பாரை அலங்கரிக்கும் வேலையும் துவங்கியுள்ளதாம்.
இனிமேல் வெங்கட்பிரபு இயக்கும் படங்களின் கதை அந்த ரெஸ்டோ பாரில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.