கம்பீரமான மனுஷன் சிதஞ்சு இருந்தாரு!.. AI மூலமா காட்டாதீங்க.. கண்கலங்கிய விக்ரமன்..!

by Ramya |
Vikraman
X

Vikraman

நடிகர் விஜயகாந்த்:

தமிழக மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். அரசியலில் ஈடுபட்ட பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர் தற்போதும் தமிழ் சினிமாவிற்கு ஒரு அடையாளமாக இருந்து வருகின்றார்.

எந்த நடிகரிடமும் வெறுப்பை சம்பாதிக்காத ஒரு உன்னத மனிதர். அவரைக் குறித்து யார் பேசினாலும் உயர்வாகத்தான் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு சினிமாவில் அனைவரிடத்திலும் அன்பாக பழகி வாழ்ந்து சென்று இருக்கின்றார். சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வந்த விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி முழுக்க முழுக்க அரசியல்வாதியாக இருந்து வந்தார்.

அரசியலிலும் இவர் கால் வைத்த போது இவருக்கு வெற்றிதான். அதனை தொடர்ந்து சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் இவரின் மறைவு செய்தி தமிழக மக்களுக்கு இடியாய் வந்து விழுந்தது. தமிழகத்தில் இருக்கும் பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

வானத்தைப்போல:

தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கும் நடிகர் விஜயகாந்த் 2000 ஆண்டு வானத்தைப்போல என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருப்பார்.


வானத்தைப்போல திரைப்படத்தில் விஜயகாந்த் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அவருடன் பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, மீனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அந்த திரைப்படத்தை இயக்கிய போது நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை இயக்குனர் விக்ரமன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.

கண்கலங்கிய விக்ரமன்:

வானத்தைப்போல திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு இருந்தே விஜயகாந்தை எனக்கு நன்றாக தெரியும். அவர் என்னை பார்த்தால் அவ்வளவு அன்போடு பாசமாக பேசுவார். வானத்தைப்போல திரைப்படத்தின் கதையை நான் ஆர்பி சவுத்ரியிடம் கூறியிருந்தேன். அவர்தான் ஆஸ்கர் ஃபிலிம் ரவிச்சந்திரன் சார் என்னை தொடர்பு கொண்டு ஆர்மி சவுத்ரியிடம் நீங்கள் ஒரு கதையை கூறியிருந்தீர்கள் அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது அதை படமாக எடுக்கலாம் என்று கூறினார்.

உடனே நான் அது விஜயகாந்த் வைத்து எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவர் ஒரு மாஸ் ஹீரோ அவர் இப்படி ஒரு சப்ஜெக்ட்டில் நடிப்பாரா என்பது சந்தேகமாக இருக்கின்றது என்று கூற உடனே அவர் விஜயகாந்திடம் தன்னை அழைத்துச் சென்று கதையை கூறினார். விஜயகாந்த் இந்த கதையை கேட்டுவிட்டு நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நான் நடிக்கின்றேன் என்று கூறினார். அவரின் ஆசைக்காக சம்மதித்தேன். இதனால் படத்தின் பாதி விஷயங்களை விஜயகாந்த் சாருக்காக மாற்றினேன். அந்த திரைப்படத்தில் அவ்வளவு எளிமையாக மாஸ் ஹீரோ என்கின்ற எந்த பில்டப்பும் இல்லாமல் சகஜமாக பழகினார். அதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

அதன் பிறகு என்னை எந்த இடத்தில் பார்த்தாலும் அவ்வளவு மரியாதையாக நடத்துவார். அவரை பார்க்க சென்றால் சாப்பிடாமல் அனுப்பி வைக்கவே மாட்டார். அப்படிப்பட்ட உன்னதமான மனிதர். அவர் உயிரிழப்பதற்கு முன்பு நான், இயக்குனர் செல்வமணி அனைவரும் ஒருமுறை பார்க்க சென்றிருந்தோம். அப்போது அவரைப் பார்த்ததுமே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.




எப்படி கம்பீரமாக இருந்த ஒரு மனிதர் உருக்குலைந்து சிதைந்து போய் இருக்கின்றார். அவரை இரண்டு பேர் சப்போர்ட்டுடன் அழைத்து வந்து உட்கார வைக்கிறார்கள். அதை பார்த்து என் மனம் நொறுங்கி விட்டது. வீட்டுக்கு போய் அதை நினைத்து நினைத்து அழுதேன். தற்போது ஏஐ டெக்னாலஜி என்று அவரை திரையில் கொண்டு வருகிறார்கள். ஆனால் அது முழுமையாக இல்லை அரைகுறையாக இருக்கின்றது. பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை' என்று மிகவும் உருக்கமாக பேசி இருந்தார் விக்ரமன்

Next Story