வேட்டையன் ரிலீஸ் அப்ப இது தேவையா?!.. ரத்னகுமார் செஞ்ச வேலையை பாருங்க!..

by Murugan |
vettaiyan
X

vettaiyan

Vettaiyan : என்னதான் விஜய், அஜித், ரஜினி படங்கள் வசூலை வாரி குவித்தாலும் அவர்களின் ரசிகர்கள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. இது எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து இருக்கிறது. ரஜினி - கமல் காலத்திலும் இருந்தது. ஒரு நடிகரின் ரசிகர்கள் அவரின் போட்டி நடிகரை கடுமையாக விமர்சனம் செய்வது. கிண்டலடிப்பது.. நக்கலடிப்பது என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் விஜய் - அஜித் ரசிகர்கள் இதை பல வருடங்களாக செய்து வருகிறார்கள். சமூகவலைத்தளங்களில் மோசமாக திட்டி கொள்கிறார்கள். மேலும், டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக்குகளை போட்டு அதை டிரெண்டிங் ஆக்கி சந்தோஷப்பட்டு வருகின்றனர். இது ஒரு மன நோய் என்பது கூட தெரியாமல் பல வருடங்களாக இதை ரசித்து செய்து வருகிறார்கள்.

ஒருவரை புகழ்வதற்காக ஒருவரை திட்ட வேண்டாம் என் அஜித் சொல்லியும் அவரின் ரசிகர்கள் கேட்கவில்லை. விஜய் கூட வாரிசு பட விழாவில் ‘சோசியல் நெட்வொர்க்கில் ஏன் இவ்வளவு கோபம்?’ என கேட்டார். அந்த பட விழாவில் பேசிய அப்பட தயாரிப்பாளர் விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் சொல்ல ரஜினி ரசிகர்களுக்கு கோபம் வந்தது.

ஜெயிலர் பட விழாவில் ‘காக்கா எவ்வளவு பறந்தாலும் கழுகாக முடியாது’ என ரஜினி பேச அதனால் விஜய் ரசிகர்கள் கோபமடைந்து இப்போது வரை ரஜினியை திட்டி வருகிறார்கள். இன்றும் கூட வேட்டையன் படம் வெளியாகியிருக்கும் நிலையில், டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜின் நண்பரும், மேயாத மான் படத்தின் இயக்குனருமான ரத்னகுமார் லியோ படத்தில் வேலை செய்தார். அந்த படத்தின் விழாவில் பேசிய அவர் ‘கழுகு எவ்வளவு தூரம் பறந்தாலும் கீழ வந்துதான் ஆகணும்’ என பேசினார். இது ரஜினிக்கு அவர் பதிலடி கொடுத்ததாக நினைத்து விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள்.


ஆனால், அதற்காக லோகேஷும், விஜயும் அவரிடம் கோபப்பட்டதாக சொல்லப்பட்டது. இப்போது லோகேஷ் இயக்கி வரும் கூலி படத்திலும் ரத்னகுமார் வேலை செய்யவில்லை. இந்நிலையில், வேட்டையன் படம் வெளியாகி இருக்கும் இன்று டிவிட்டரில் ‘WorldMentalHealthDay' என்கிற ஹேஷ்டேக்கை ரத்னகுமார் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, அவர் ரஜினியையும், ரஜினி ரசிகர்களையும்தான் மறைமுகமாக கலாய்த்திருக்கிறார் என பதிவிட்டு விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.

Next Story