இந்தியன் 2-வால் கேம் சேஞ்சருக்கு வந்த சிக்கல்!.. இந்தியன் 3-ஐ நம்பி இருக்கும் ஷங்கர்!...

by Murugan |   ( Updated:2024-12-28 13:52:03  )
shankar
X

Game Changer: இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக இருப்பவர் ஷங்கர். தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கியதில் இவர்தான் எல்லோருக்கும் முன்னோடி. பாகுபலி எடுத்த ராஜமவுலியே ‘எனக்கு இன்ஸ்பிரேஷன் ஷங்கர் சார்தான்’ என சொல்லி இருக்கிறார். பெரிய நடிகர்கள், பிரம்மாண்டமான செட்கள், சினிமாவில் இதுவரை யாரும் காட்டாத இடங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அதிக நாட்கள் படப்பிடிப்பு என தமிழ் சினிமாவின் ஸ்டைலையே மாற்றியவர் இவர்.

ஆனால், அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தி அதிக செலவு வைக்கிறார் என தயாரிப்பாளர்கள் புலம்புவதுண்டு. பாடல் காட்சிகளில் மலைக்கும், ரயிலுக்கும் கூட பெயிண்டு அடித்துவிடுவார் என அவர்கள் சொல்வதுண்டு. ஷங்கரின் படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துவிட்டால் ஓகே.

இல்லையென்றால் தயாரிப்பாளரின் கதி அவ்வளவுதான். ரஜினியை வைத்து 3 திரைப்படங்களை இயக்கியுள்ளார். கமலை வைத்து இந்தியன், இந்தியன் 2 ஆகிய 2 படங்களை இயக்கியுள்ளார். இதில் இந்தியன் 2 படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. எனவே, இப்படம் அதிக வசூலை பெறவில்லை. இது இப்படத்தை தயாரித்த லைக்காவுக்கும், படத்தை வாங்கி விற்ற வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை கொடுத்தது.


இதுதான் இப்போது ஷங்கருக்கும், கேம் சேஞ்சர் படத்திற்கும் சிக்கலாக மாறியுள்ளது. இந்தியன் 2 படம் உருவான போதே தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் எனும் படத்தை துவங்கினார் ஷங்கர். இந்த படத்தை ஆந்திராவில் அதிக பட்ஜெட்டில் படமெடுக்கும் தில் ராஜூ தயாரித்துள்ளார்.

கார்த்திக் சுப்பாராஜ் சொன்ன கதையை திரைக்கதையாக மாற்றி இப்படத்தை ஷங்கர் உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் கூட சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 5 பாடல்களுக்கு மட்டுமே ஷங்கர் 17 கோடி வரை செலவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில், இந்தியன் 3 படத்தை சிக்கலின்றி முடித்துக்கொடுக்க ஷங்கர் ஒப்புக்கொண்டால் மட்டுமே தமிழகத்தில் கேம் சேஞ்சர் படத்தை வெளியிடுவோம் என வினியோகஸ்தர்கள் லைக்காவிடம் சொல்லி இருக்கிறார்களாம். இந்தியன் 3 ஓடிடி ரிலீஸ் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், இந்தியன் 3 தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என ஷங்கர் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம், இந்தியன் 3-வை முடித்து கொடுக்க தனக்கு 60 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என லைக்காவிடம் ஷங்கர் சொல்லிவிட்டாராம்.

Next Story