சூர்யாவுக்கு இருக்கு!.. விஜய்க்கு என்ன தகுதி இருக்கு?.. போட்டு பொளக்கும் திவ்யா சத்யராஜ்!..

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். உண்மையை சொல்லப்போனால் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு இவரின் மார்க்கெட் மதிப்பு இருக்கிறது. ஆனால், அவரோ சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டார்.
விஜய்க்கு முன் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். அவருக்கு பின் கமல் அரசியலுக்கு வந்தார். ஆனால், அவரால் நினைத்ததை செய்ய முடியவில்லை. அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அறிவித்தார். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி அவர் பின்வாங்கினார்.
இப்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கட்சி துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. மாநாடு, உறுப்பினர்களை நியமிப்பது, பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் என அரசியலில் செயல்பட்டு வருகிறார். அதேநேரம், அவர் இன்னமும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. ஏனெனில், இப்போது ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார்.
அதேநேரம், திமுக ஆட்சியை மட்டுமே தொடர்ந்து விமர்சனம செய்து வருகிறார். அதிமுக, பாஜக பற்றியெல்லாம் அவர் பேசுவதே இல்லை. திமுகவை மன்னராட்சி என விமர்சித்து வரும் விஜய், 2026ல் திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றே திட்டம் தீட்டி வருகிறார். அவர் நினைப்பது நடக்குமா என்பது தெரியவில்லை. ஒருபக்கம், சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துகொண்ட திவ்யா சத்யராஜ் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு எங்கள் உதயநிதி விஜயை போல விமானத்தில் தோழியுடன் ஜாலியாக சுற்றுபவர் அல்ல. மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் இறங்கி வருவார் என பேசியிருந்தார். இந்நிலையில், இப்போது ‘சூர்யா சார் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அத்தனை மாணவர்களை படிக்க வச்சிட்டு இருக்கார். அதனால், அரசியலுக்கு வருவதற்கான தகுதி அவரிடம் இருக்கு.
ஆனால், விஜய் சாருக்கு என்ன தகுதி இருக்கு?.. அவரோட கனவு, ஆசை எல்லாமே முதல்வர் நாற்காலியை நோக்கியே இருக்கு. மக்கள் பிரச்சனை நோக்கி அல்ல’ என விளாசியிருக்கிறார்.